பதினெண்மேற்கணக்கு

நிறைந்த அடிகளைக் கொண்ட 18 நூல்களின் தொகுப்பு, பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள்.

பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கபட்டுள்ளன. பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்குக் கருத்தில் நிறுத்த வேண்டும்.

இப்பாடல் தொகுதிகள் பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத் தரத்தையும் பெருமையையும் காண துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
Remove ads

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல் இயற்றியவர் பாடப்பட்டத் தலைவன்
நற்றிணை 192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன பலர்
குறுந்தொகை 205 புலவர்கள் பலர்
ஐங்குறுநூறு கபிலர் பலர்
பதிற்றுப்பத்து பலர் சேரர்
பரிபாடல் 13 புலவர்கள்
கலித்தொகை நல்லாண்டுவனார்
அகநானூறு பலர் பலர்
புறநானூறு பலர் பலர்

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள் பாடிய புலவர் பாட்டுடைத் தலைவன்
திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் கரிகால் வளவன்
சிறுபாணாற்றுப்படை நற்றாத்தனார் நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையன்
நெடுநல்வாடை நக்கீரர் நெடுஞ்செழியன்
குறிஞ்சிப் பாட்டு கபிலர் பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது
முல்லைப்பாட்டு நப்பூதனார் நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் நெடுஞ்செழியன்
பட்டினப் பாலை கடியலுர் உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவன்
மலைபடுகடாம் பெருங்குன்றப் பெருங்கௌசிகனார் நவிரமலை நன்னன்
Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads