சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார்.[1] இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.

சிறுபஞ்சமூல 20-ஆவது ஒலை
மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
Remove ads

நூல் பெயர்க்காரணம்

பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும், மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து. இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது. காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.

Remove ads

இதன் அமைப்பு

தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்' உள்ளது. இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21-ஆவதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப்பட்ட 37-ஆவது பாடல் பகுதி பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஓலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் …' என்ற 37-ஆவது பாடல் மட்டும் இருக்கிறது.

அந்த 37-ஆவது பாடலும், அதற்குப் பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.

Thumb

இப்பாடல்,'மனிதன் சாதாரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads