ஏலாதி
பதினெண்கீழ்க்கணக்கு நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏலாதி என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்றாகும். சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. வடமொழிப் புலமை மிக்கவா். ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.
Remove ads
நூலின் பெயர்க்காரணம்
இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறுநாகப் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக் கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.
எடுத்துக்காட்டு
இடையின் அழகோ, தோளின் அழகோ ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:
- இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
- நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
- கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
- எழுத்தின் வனப்பே வனப்பு. (பாடல் எண் 74)
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads