கோதமனார்

சங்க காலப் புலவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோதமனார்(Kodhamanar) சங்க காலப் புலவர் ஆவார். இவர் சங்க இலக்கியத்தில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று, திருவள்ளுவமாலையில் 15ஆம் பாடலாகும்.[1]

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
Remove ads

சங்க இலக்கியத்தில் பங்களிப்பு

இவர் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் 366ஆம் பாடலையும் திருவள்ளுவமாலையில் 15ஆம் பாடலையும் இயற்றியுள்ளார்.[2]

வள்ளுவர் மற்றும் குறள் குறித்த பார்வை

வள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த கோதமனாரின் கருத்து:[3]

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.[4]

Remove ads

புறநானூற்றுப் பாடல்

கோதமனார் எழுதிய புறநானூற்றுப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக,
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்,

தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே;
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்!
நின்ஒன்று உரைப்பக் கேண்மதி:
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,

ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,
இரவின் எல்லை வருவது நாடி,
உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு,
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ,

அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப,
கெடல் அருந் திருவ!
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி,
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,

நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை,
காவுதொறும்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.[6][7]

உரை

Thumb

இடியோசை கேட்டு நடுங்கும் நாகம் போல, முரசின் முழக்கமானது என்னுடைய வேந்தன் வீரன், அவனை வெல்பவர்கள் யாரும் இல்லை என்ற ஒரே செய்தியை பகைவர்களின் காதில் சொல்லும். இப்படி வீரமும், புகழும் பெற்று ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த பேரரசர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் போவார்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற புகழ் நிலைத்து இருக்கும். இதுவே உலகத்து இயற்கை ஆகும். அறநெறி அறிந்த மன்னன் மகனே! வீரர்கள் போற்றும் வெற்றி வேந்தனே! உன்னுடைய வலிமையினை பிறர் அறியாத வண்ணம் காத்துக் கொள். பிறர் சொல்லும் செய்தியில் உள்ள உண்மையினை உணர்ந்து கொள். பகல் பொழுதில் உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இரு. பகல் பொழுதில் வயலில் உழுத எருது (நெல்லை உழவனுக்கு அளித்து) மாலையில் வைக்கோலைத் தின்னும். அதனைப் போன்று உனது உணவினை வேண்டுவோர்க்கெல்லாம் கொடுத்து மகிழ்வு கொள். பலியிடுவதற்கு நிறுத்தப்பட்டு இருக்கும் ஆடுகளுக்கு சாதல் நிச்சயம். அதனைப் போன்று மனிதர்களுக்கும் சாதல் உண்டு என்பது உண்மை. இது பொய்யன்று.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads