இலங்கையின் 15-வது நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் (15th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 8-வது நாடாளுமன்றம் என்பது 2015 ஆகத்து 17 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2015 செப்டம்பர் 1 இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.
Remove ads
தேர்தல்

ஐதேமு
ஐமசுகூ
ததேகூ
15-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது.[1][2][3][4] ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.[5] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 95 இடங்களைக் கைப்பற்றியது.[5][6] இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) 16 டங்களைக் கைப்பற்றியது.[5] ஏனைய எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (1), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) எனப் பெற்றன.[7]
முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
மூலங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads