இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் (16th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம் என்பது 2020 ஆகத்து 20 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2020 ஆகத்து 20 இல் இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.
Remove ads
தேர்தல்

■ – இபொமு ■ – ஐமச ■ – ததேகூ ■ – இசுக ■ – ஈமசக ■ – ஏனைய கட்சிகள்
16-வது நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது.[1] மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.[2][3][4] ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும் கைப்பற்றின.[5][6][7] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டும் கைப்பற்றி வரலாறு காணாத தோல்வியடைந்தது.[8]
முடிவுகள்
தேசிய வாரியாக
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads