கலாச்சார அமைச்சகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாச்சார அமைச்சகம் என்பது இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பான இந்திய அரசாங்க அமைச்சகம் ஆகும்.
தற்பொழுது ஜி. கிஷன் ரெட்டி கலாச்சாரத் துறை அமைச்சராக உள்ளார். சமீபத்தில் அரசாங்கம் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது.[2]
Remove ads
சிறப்பியல்புகள்
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மையான புராதான சிலைகள் மற்றும் கோவில் சிலைகளை மீட்டெடுக்கும் பணி கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.[3][4] கலாச்சார அமைச்சகம் வெளிநாடுகளிலுள்ள இந்தியாவின் தூதரங்கள் மூலமாக இந்த பணிகளை மேற்கொள்கிறது.[5][6]
- 2021 அக்டோபர் 01 வரை, இந்திய அரசாங்கம் 211 சிலைகளை மீட்டெடுத்துள்ளது.
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து 2014வரை 13 சிலைகளே மீட்கப்பட்டிருந்தன. 2014க்குப் பிறகு 198சிலைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.[7]
- 2022 ஜீன் மாதம், 10க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழக சிலைமீட்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2022வரை 228சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.[8]
Remove ads
அமைப்பு
இணைக்கப்பட்ட அலுவலகங்கள்
- இந்தியத் தொல்லியல் துறை
- மத்திய செயலக நூலகம்
- இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம்
துணை அலுவலகங்கள்
- இந்திய மானுடவியல் ஆய்வகம், கொல்கத்தா
- மத்திய மேற்கோள் நூலகம், கொல்கத்தா
- கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆராய்ச்சி ஆய்வகம், இலக்னோ
- தேசிய நவீன கலைக்கூடம், புது தில்லி
- தேசிய நவீன கலைக்கூடம், மும்பை
- தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூரு
- இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா
- தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
தன்னாட்சி அமைப்புகள்
- இந்திய சுவடிகள் இயக்கம், தில்லி
- அலகாபாத் அருங்காட்சியகம், அலகாபாத்
- ஆசியச் சமூகம், கொல்கத்தா
- மத்திய புத்த ஆய்வு நிறுவனம், ஜம்மு மற்றும் காஷ்மீர்
- திபெத்திய உயர் ஆய்வுகளின் மத்திய நிறுவனம்
- கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம், புது தில்லி
- தில்லி பொது நூலகம், டெல்லி
- காந்தி சமிதி, புது தில்லி
- இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
- இந்திரா காந்தி தேசிய கலை மையம், புது தில்லி
- இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மானவ சங்க்ரஹாலயா, போபால்
- கலாசேத்திரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை
- குதா பக்ச் கிழக்கத்திய பொது நூலகம், பாட்னா
- லலித் கலா அகாதமி, புது தில்லி
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வு நிறுவனம், கொல்கத்தா
- தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை, கொல்கத்தா
- தேசிய அருங்காட்சியக நிறுவனம், டெல்லி
- தேசிய நாடகப் பள்ளி, புது தில்லி
- நவ் நாளந்தா மகாவிஹாரா, நாளந்தா, பீகார்
- நேரு நினைவு அருங்காட்சியகமும் கோளகமும், புது தில்லி (தீன் மூர்த்தி பவன்)
- ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை, கொல்கத்தா, மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டம், 1961 [11]
- ரசா நூலகம், ராம்பூர்
- சாகித்ய அகாதமி, புது தில்லி
- சாலர் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத்து
- சங்கீத நாடக அகாதமி, புது தில்லி
- தஞ்சை சரசுவதிமகால் நூலகம், தஞ்சை
- விக்டோரியா நினைவிடம், கொல்கத்தா
மண்டல கலாச்சார மையங்கள் (இந்தியாவின் கலாச்சார மண்டலங்களின் அடிப்படையில்)
Remove ads
கலாச்சார அமைச்சர்கள்
மாநில அமைச்சர்கள் பட்டியல்
இவற்றையும் பார்க் க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads