திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tirunelveli Junction railway station, நிலையக் குறியீடு:TEN) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியிலுள்ள முக்கியமானதும், புகழ்பெற்றதும், பழமையானதுமான தொடருந்து சந்திப்பு நிலையமாகும். இது திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐந்து பயணிகள் நடைமேடையும், எட்டு தொடருந்து பாதையும் உள்ளது.[1][2] இது தென்னக இரயில்வேயின் அதிகம் லாபம் வரக்கூடிய தொடருந்து வழித்தடமான சென்னை – திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் அமைந்திருக்கிறது.[3][4]
Remove ads
வசதிகள்
- கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
- 24 மணிநேர அழைப்பு வாடகையுந்து நிற்குமிடம்
- ஆட்டோ நிற்குமிடம்
- பயணிகள் அறை
- உணவு மற்றும் பழநிலையம்
- தொலைபேசி நிலையம்
- ஏடிஎம் வசதி
- குளிரூட்டப்பட்ட தங்கும் அறை (A/C) & குளிரூட்டப்படாத தங்கும் அறை (Non A/C)
- நெல்லை பிளாசா சைவ உணவகம்
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
- இரு சக்கர மற்றும் நான்கு சக்கர பார்க்கிங் வசதி
- பயணச்சீட்டு வழங்கும் வசதிகளோடு மூன்று நுழைவாயில்கள் உள்ளன, கிழக்கே 2 நுழைவாயில்களும், மேற்கே 1 நுழைவாயிலும் உள்ளது.
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[5][6][7][8][9]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[10][11][12]
இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்படும் முக்கிய பணிகள்[13][14]:
- மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டு, புதிய சாலை வசதி மூலம் ரயில் நிலையத்தை எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டு வருகிறது. இது பிரதான நுழைவாயிலின் நெருக்கடியினை குறைக்கும்.
- மேற்கு மற்றும் கிழக்கு முனையத்தை இணைக்கும் வகையில் புதிய உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது.
- நிலையத்தின் முகப்பை மாற்றியமைத்தல்,
- கிழக்கு பகுதியில் இரண்டு அடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம்(G+2), மூன்று அடுக்கு (G+3)இரு சக்கர வாகன நிறுத்துமிடம் புதிதாக கட்டப்படுகின்றது.
- கிழக்கு மற்றும் மேற்கு பயணிகள் வருகை புறப்பாடு பகுதிகள், அலுவலக முனைய கட்டிடங்கள்,சரக்கு முனையம்
- தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள்
- நிலையத்தின் உட்புற மேம்பாடு, நடைமேடை மேம்பாடு
- நடைமேடை 6 புதிதாக கட்டப்பட்டு வருகிறது, முன்பு இங்கு ஒரு சரக்கு ரயில் நடைமேடை இயங்கி வந்தது, இது முன்னதாக கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.[15]
- நடைமேடைகள் 1 & 6 - 610 மீ நீளமும், 9 மீ அகலமும் கொண்டவை, நடைமேடை 1 கூடுதலாக 110மீ நீளமும் 3மீ அகலமும் கொண்டவை[16]
- நடைமேடைகள் 2, 3, 4, 5 - 610 மீ நீளமும், 11 மீ அகலமும் கொண்டவை
- நடைமேடை மேற் கூரைகள் மாற்றியமைத்தல், தரைத்தளம் மாற்றியமைத்தல்
- புதிய பயணிகல் தங்குமிடங்கள், கழிப்பறைகள், விசாலமான நடைமேடை தங்குமிடங்கள்
- மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இரயில் நிலையத்தினை மாற்றியமைத்தல்
- டிஜிட்டல் அறிக்கை பலகைகள், சிசிடிவிகள் மற்றும் ஒருங்கிணைந்த அறிவிப்பு அமைப்பு
- கூடுதல் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் பயணிகள் இருக்கைகள்
- இயற்கையை ரசிக்கும் வண்ணம் மேலும் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் இரயில் நிலையம் மாற்றப்படும் ஆகியவை அடையாளம் காணப்பட்ட திட்டங்களில் அடங்கும்.
- இரண்டாவது கட்டத்தில்
- நிலையத்தின் இருபுறமும் வணிக வளாகங்கள்
Remove ads
வண்டிகளின் வரிசை

பயணியர் தொடர்வண்டி
- 56821/56822 திருநெல்வேலி – மயிலாடுதுரை – ஈரோடு பயணியர் தொடருந்து
- 56319/56320 நாகர்கோவில் – கோவை விரைவு பயணியர் தொடருந்து
- 56700/56701 மதுரை – புனலூர் விரைவு பயணியர் தொடருந்து
- 56761/56762 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து
- 56763/56764 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து
- 56765/56766 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து
- 56828/56827 திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் தொடருந்து
- 56312/56311 திருநெல்வேலி – கன்னியாகுமரி பயணியர் தொடருந்து
- 56767/56768 தூத்துக்குடி–திருநெல்வேலி–திருச்செந்தூர் பயணியர் தொடருந்து
- 56801/56800 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56797/56798 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56799/56796 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56803/56802 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56770/56769 திருச்செந்தூர் – பழனி பயணியர் தொடருந்து
- பாலருவி தொடர்வண்டி
- 16191/16192 தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுரயில் (மயிலாடுதுறை வழியாக)
Remove ads
வழித்தடங்கள்
இந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:
- வடக்கே - விருதுநகர் சந்திப்பு
- தெற்கே - நாகர்கோவில் சந்திப்பு
- மேற்கே - செங்கோட்டை
- தென்கிழக்கு - திருச்செந்தூர்
திருநெல்வேலியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்
Remove ads
திருநெல்வேலி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads