வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி (Vaniyambadi Assembly constituency) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 47. திருப்பத்தூர், அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்..
வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.
இந்த தொகுதியில் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகள், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் உள்ளது. இத்தொகுதியில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் என்.முகமது நயீம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி உள்ளது.[2]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வாணியம்பாடி வட்டம் (பகுதி)
தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.
உதயேந்திரம் (பேரூராட்சி), ஜாபராபாத் (சென்சஸ் டவுன்), வாணியம்பாடி (நகராட்சி) மற்றும் ஆலங்காயம் (பேரூராட்சி). வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
2016
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
