ருபீடியம் நைட்ரேட்டு (Rubidium nitrate) என்பது RbNO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வெண்ணிறத்தில் காணப்படும் ஒரு கனிம வேதியற் சேர்மமாகும். இது தண்ணீரில் மிக எளிதாகக் கரையும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
உருபீடியம் நைட்ரேட்டு
Thumb
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
13126-12-0 Y
ChemSpider 23971 Y
EC number 236-060-1
InChI
  • InChI=1S/NO3.Rb/c2-1(3)4;/q-1;+1 Y
    Key: RTHYXYOJKHGZJT-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/NO3.Rb/c2-1(3)4;/q-1;+1
    Key: RTHYXYOJKHGZJT-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25731
வே.ந.வி.ப எண் QV0900000
  • [Rb+].[O-][N+]([O-])=O
பண்புகள்
RbNO3
வாய்ப்பாட்டு எடை 147.473 கி/மோல்
தோற்றம் வென்மை நீருறிஞ்சி திண்மம்
அடர்த்தி 3.11 கி/செ.மீ3
உருகுநிலை 310 °C (590 °F; 583 K) சிதைவடையும்
கொதிநிலை 578 °C (1,072 °F; 851 K)
44.28 கி/100 மி.லி (16 °செ), 65 கி/100 மி.லி (25 செ)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.524
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
4625 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருபீடியம் சல்பேட்டு
ருபீடியம் குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் நைட்ரேட்டு
சோடியம் நைட்ரேட்டு
பொட்டாசியம் நைட்ரேட்டு
சீசியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இது: Y/N?)
மூடு

பண்புகள்

Thumb
தண்ணீரில் ருபீடியம் நைட்ரேட்டு கரைதிறன்

வெண்ணிறப் படிகங்களாகக் காணப்படும் ருபீடியம் நைட்ரேட்டு தண்ணீரில் மிக நன்றாகவும் அசிட்டோனில் சிறிதளவும் கரைகிறது. தீச்சுவலை பரிசோதனையில் ருபீடியம் நைட்ரேட்டு மெல்லிய ஊதா/ மெல்லிய பழுப்பு நிற வண்ணத்தைக் காட்டுகிறது.

பயன்கள்

ருபீடியம் சேர்மங்கள் குறைவான பயன்பாடுகளையே கொண்டுள்ளன. சீசியம் நைட்ரேட்டு போலவே இதுவும் அகச்சிவப்புக் கதிர்வீச்சை உருவாக்கும் வாணச்செய்முறை தொழிலில் ஆக்சிசனேற்றியாகவும் நிறமியாகவும், உதாரணமாக ஒளியூட்டும் கிளரொளி, கவர்ந்திழுக்கும் ஒளி முதலியனவாக பயன்படுத்தப்படுகிறது. ருபீடியம் மற்றும் ருபீடியம் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் தாதுப் பொருளாகவும் பயன்படுகிறது. சில வினையூக்கிகள் மற்றும் மினுமினுப்பு எண்ணிகள் தயாரிப்பிலும் பட்டாசுத் தொழிலில் அரிதாக சிவப்பு – ஊதா நிற வெளிப்பாட்டுக்காகவும் ருபீடியம் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

RbNO3 ருபீடியம் உலோகம், அதனுடைய ஐதராக்சைடு அல்லது கார்பனேட்டை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து தயாரிக்கலாம்.

RbOH + HNO3 → RbNO3 + H2O
2 Rb + 2 HNO3 → 2 RbNO3 + H2

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.