பாவேந்தர் பாரதிதாசன் விருது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை (பலவகை) எண். 1609, பொதுத் (செய்தி, மக்கள் தொடர்பு - விளம்பரம் -2) துறை, நாள்: 28-08-1978 மூலம் 1978 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]
Remove ads
விருது பெற்றவர்கள் பட்டியல்
குறிப்புகள்
- 1990 ஆம் ஆண்டு பாரதிதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 21 கவிஞர்களுக்கு பாரதிதாசன் விருது அளிக்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டு பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 23 கவிஞர்களுக்கு பாரதிதாசன் விருது அளிக்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads