மலேசிய நாடாளுமன்றம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய நாடாளுமன்றம்
Remove ads

மலேசிய நாடாளுமன்றம் (Parliament of Malaysia) என்பது மலேசியாவின் அரசமைப்புச் சபையாகும். இது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்ட ஈரவைகளைக் கொண்டது. யாங் டி பெர்துவான் அகோங் (மன்னர்) நாட்டின் தலைவர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் மலேசிய நாடாளுமன்றம்Parliament of MalaysiaParlimen Malaysia, வகை ...

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசிய தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

Remove ads

வரலாறு

மலாயா கூட்டமைப்பு

வரலாற்று அடிப்படையில், 1957-ஆம் ஆண்டில், பிரித்தானியர்களிடம் இருந்து மலேசிய விடுதலை பெற்றது. அதன் பின்னர்1963-ஆம் ஆண்டில் மலேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் எந்த ஒரு மாநிலமும் நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கவில்லை.

1863-ஆம் ஆண்டு முதல், சரவாக் மாநிலம் மட்டும் அதன் நிர்வாகப் பணிகளுக்காக சொந்த மாநிலச் சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது. மலாயா, சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் சட்டம் இயற்றும் சட்டமன்றங்களை உருவாக்குவதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இருப்பினும், அவை உச்சக்கட்ட சட்டங்களை உருவாக்கும் தகுதிகளைப் பெற்று இருக்கவில்லை.[1]

சரவாக் விசயத்தில், வெள்ளை இராசாக்களும் பிரித்தானிய சரவாக் முடியாட்சி ஆளுநர்களும் உச்சக்கட்டத் தகுதிகளைப் பெற்று இருந்தனர். தீபகற்ப மலேசியாவைப் பொருத்த வரையில் பிரித்தானிய மலாயாவின் ஆணையர்களான மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள் மட்டுமே உச்சக்கட்ட அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் பொறுப்புகள் பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை.

ரீட் ஆணையம்

மலாயாவின் அரசியலமைப்பை ரீட் ஆணையம் வரைவு செய்தது. ரீட் ஆணையம் (Reid Commission) என்பது பிரித்தானியரிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், மலாயா அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நடுநிலையான ஆணையமாகும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளுக்குப் பின்னர், 1957 ஆகஸ்டு 31-ஆம் தேதி பிரித்தானியரிடம் இருந்து மலாயா விடுதலை பெற்றது.

மலாயா ஆட்சி முறை பிரித்தானிய முறையைப் பின்பற்றியது. இந்த முறை ஓர் ஈரவை நாடாளுமன்றம் ஆகும். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஓர் அவை; அதற்கு மக்களவை என்று பெயர். மற்ற ஓர் அவையான மேலவைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. மேலவையின் சில உறுப்பினர்கள் நாட்டின் பேரரசரால் நியமிக்கப்படுகிறார்கள்.

மலேசிய அரசியலமைப்பு

1959-ஆம் ஆண்டு வரை மலாயாவின் சட்டமன்ற அமைப்பாக மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் தொடர்ந்து செயல்பட மலேசிய அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியது. பின்னர் 1959-இல், விடுதலைக்குப் பிந்தைய முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. மலாயாவின் முதல் நாடாளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.[2]

மலாயாவின் முதல் நாடாளுமன்றக் கூட்டம், 1959 செப்டம்பர் மாதம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தன்னார்வப் படையின் தலைமையக கட்டிடத்தில் (Federated Malay States Volunteer Force) கூடியது. அந்தக் கட்டிடம் அப்போது மேக்சுவெல் சாலையில் ஒரு குன்றின் உச்சியில் இருந்தது. தற்போது அந்தச் சாலை துன் இசுமாயில் சாலை என்று அழைக்கப்படுகிறது. மேலவை கீழே இருந்த தரை தளத்தின் மண்டபத்தில் கூடியது. மக்களவை முதல் தளத்தில் உள்ள மண்டபத்தில் கூடியது.

Remove ads

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், 1959 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட பரிந்துரைத்தார். கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. செப்டம்பர் 1962-இல் கட்டுமானம் தொடங்கியது.

18 மாடிகள் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில், இரு அவைகளுக்கும் மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற மாடிகளில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா; மலேசியாவின் மூன்றாவது மலேசியப் பேரரசர் துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கூம் சையத் அசன் சமாலுல்லைல் அவர்களால், 21 நவம்பர் 1963 அன்று நடைபெற்றது.[3][4]

Remove ads

தேர்தல் முடிவுகள்

2013-ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் கட்சி (கூட்டணி), வாக்குகள் ...
  1. 2008 தேர்தலின் பின்னர் சபா முற்போக்கு கட்சி தேசிய முன்னனியில் இருந்து விலகியதனால், 2 மேலதிக இடங்கள் இழப்பு ஏற்பட்டது.

2022-ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர்கள் ...
Remove ads

2023-ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமைப்பு

பாரிசான் நேசனல் தலைமையிலான எதிர்க்கட்சி (100) பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான கூட்டணி அரசு (122)*
79 18 3 1 8 113
பாரிசான் நேசனல் GS O WR பாக்காத்தான் அரப்பான்
மலேசிய நாடாளுமன்றம் (மக்களவை), 16 சூலை 2018 (222 தொகுதிகள்)
பாரிசான் நேசனல் தலைமையிலான கூட்டணி அரசு (115)* பாக்காத்தான் அராப்பான் தலைமையிலான எதிர்க்கட்சி (104)
41 39 19 8 9 7 7 90
பாரிசான் நேசனல் பெரிக்காத்தான் நேசனல் GPS GRS வேறு WR பாக்காத்தான் அராப்பான்
மலேசிய நாடாளுமன்றம் (மக்களவை), 10 அக்டோபர் 2022 (219 இடங்கள் - 3 காலி)
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads