உடுமலைப்பேட்டை
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மிகமுக்கியமான நகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உடுமலைப்பேட்டை (Udumalaipettai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சிதான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில்தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையின்மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது.[4]

உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன. உடுமலைப்பேட்டை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
உடுமலைப்பேட்டை நகராட்சி
இந்த உடுமலைப்பேட்டை நகராட்சியானது 1918 - ம் ஆண்டு முதன்முதலில் நகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
Remove ads
உடுமலைப்பேட்டை மாநகராட்சி
தமிழ்நாட்டில் மேலும் பல புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்தப்படும் என 26.04.2022 சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. கே.என்.நேரு அறிவித்தார். அதன்படி உடுமலைப்பேட்டை நகராட்சியை அருகாமையில் உள்ள கணக்கம்பாளையம், இராகல்பாவி, போடிப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணறு குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிதாக உடுமலைப்பேட்டை மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இந்த ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வார்டு மறுவரையறை பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களுடன் சுமார் அறுபது வார்டுகளுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[6]
திருவிழாக்கள்

ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது.
Remove ads
சுற்றுலா தலங்கள்
- திருமூர்த்தி மலை
- திருமூர்த்தி அணை
- திருமூர்த்தி அருவி
- அமராவதி அணை
- அமராவதி முதலைப் பண்ணை[7]
- மறையாறு
- சின்னாறு
போக்குவரத்து
இந்த நகராட்சியில் இருந்து பல தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. அதனடிப்படையில் பொள்ளாச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, வால்பாறை, மூணாறு, மறையூர், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், குமுளி, போடிநாயக்கனூர், சங்கரன்கோவில், சிவகாசி, ராசபாளையம், அருப்புக்கோட்டை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், விளாத்திகுளம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, வேளாங்கண்ணி, கரூர், சேலம், ஓசூர், சென்னை, அந்தியூர், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், திருப்பூர், தாராபுரம், சத்தியமங்கலம், மைசூரு, கூடலூர், உதகை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, என தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கும் குதிரையாறு அணை, அமராவதி அணை, திருமூர்த்தி அணை, ஆழியாறு அணை, போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், கொழுமம், பெரிய நெகமம், காட்டம்பட்டி, பனப்பட்டி காளியாபுரம், கோட்டூர், இரமணமுதலிபுதூர், கணியூர், கடத்தூர், பெல்லம்பட்டி, செஞ்சேரிமலை, குடிமங்கலம், காமநாயக்கன்பாளையம் , சுல்தான்பேட்டை, பல்லடம், கேத்தனூர், கோமங்கலம், மடத்துக்குளம் போன்ற கிராமப்பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகராட்சி மற்றும் புறநகர் கிராமங்களுக்கு நகர பேருந்து சேவையும் உள்ளது.
- இங்கிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 80 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
உடுமலைப்பேட்டை காய்கறிச் சந்தை
உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள காய்கறி சந்தையானது கொங்கு நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய காய்கறி சந்தை ஆகும். ஒட்டன்சத்திரம், திருப்பூர் காய்கறி சந்தைக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய சந்தை ஆகும். சுற்றுவட்டார பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, மடத்துக்குளம், பழநி, தாராபுரம், குண்டடம், செஞ்சேரிமலை, பூளவாடி ஆகிய வட்டாரங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த காய்கறி சந்தையில் நேரடியாக மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாகவும் விற்கப்படுகிறது. மேலும் உழவர் சந்தையும் உடுமலைப்பேட்டை நகரில் இயங்குகிறது.
Remove ads
உடுமலைப்பேட்டை தொடருந்து நிலையம்
உடுமலைப்பேட்டை நகராட்சியில் தளி ரோட்டில் இரயில் நிலையம் உள்ளது. சேலம் கோட்டத்தில் அமைந்துள்ளது. ரயில் போக்குவரத்து நேரங்களில் எப்பொழுதுமே சுறுசுறுப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தென்தமிழக பகுதிகளுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து சேவை உள்ளது.
இந்த இரயில் நிலையம் 1,2&3 என மூன்று நடைமேடைகள் உள்ளன. இதில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகள் பயணிகளை கையாளும் விதமாகவும் மூன்றாவது நடைமேடை சரக்குகளை கையாளும் விதமாக அமைந்துள்ளது.
Remove ads
புகழ்பெற்ற மனிதர்கள்
- உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.
- சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர்.
- கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
- கல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது.
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி
- ஆர்விஜி மேல்நிலைப்பள்ளி குறிச்சிக்கோட்டை
- பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- ஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி
- வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி
- மலையாண்டிபட்டினம் மேல்நிலைப்பள்ளி
- ஜல்லிபட்டி மேல்நிலைப்பள்ளி
- பூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும்
- சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஆர்கேஆர் மேல்நிலைப்பள்ளி,
- ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி
- லூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி
- ஜிவிஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- பொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும்
- வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
- கமலம் கலை அறிவியல் கல்லூரி
- விஷ்டம் மேலாண்மை கல்லூரி
- சுகுணா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி
- ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி
- அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
- தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது
- நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி இயங்கி வருகின்றன.
- அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ)
- அரசு இசைப்பள்ளி, தாகூர் மாளிகை, உடுமலை
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads