சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம். அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பதை இலக்கியங்களை ஆராயும்போது தெளிவாகிறது.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
பிற்காலத்தில் பெண்பாற் புலவர்களின் பெயர் எவ்வாறு சுட்டப்பட்டதெனின், அவர்கள் எழுதிய இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்தே அவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது என்பதே உண்மை.எடுத்துக்காட்டாக செம்புலம் பற்றி ஒரு புலவர் பாடுகிறார். அவர் பெயர் ஆய்வாளர்களால் அறியப்படவில்லை. ஆயினும் கவிதை இரசம் கொட்டுகிறது. எனவே அப்புலவருக்கு செம்புலப்பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.
சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர்.[சான்று தேவை] இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநர் ஆற்றுப்படை, நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
Remove ads
சங்க கால பெண்பாற் புலவர்கள்
சங்க கால பெண்பாற் புலவர்கள் பட்டியல் பின்வருமாறு:[1]
- அச்சியத்தை மகள் நாகையார்
- ஔவையார்
- அள்ளுரர் நன்முல்லை
- ஆதிமந்தி - குறுந் 3
- இளவெயினி - புறம் 157
- உப்பை ஃ உறுவை
- ஒக்கூர் மாசாத்தியார்
- கரீனா கண்கணையார்
- கவியரசி
- கழார் கீரன் எயிற்றியார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணிப் பசலையார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- கிழார் கீரனெயிற்றியார்
- குடபுலவியனார்
- குமிழிநாழல் நாப்பசலையார்
- குமுழி ஞாழல் நப்பசையார்
- குறமகள் ஃ இளவெயினி
- குறமகள் ஃ குறிஎயினி
- குற மகள் இளவெயினியார்
- கூகைக்கோழியார்
- தமிழறியும் பெருமாள்
- தாயங்கண்ணி - புறம் 250
- நக்கண்ணையார்
- நல்லிசைப் புலமை மெல்லியார்
- நல்வெள்ளியார்
- நெட்டிமையார்
- நெடும்பல்லியத்தை
- பசலையார்
- பாரிமகளிர்
- பூங்கண்ணுத்திரையார்
- பூங்கண் உத்திரையார்
- பூதபாண்டியன் தேவியார்
- பெண்மணிப் பூதியார்
- பெருங்கோப்பெண்டு
- பேய்மகள் இளவெயினி
- பேயனார்
- பேரெயென் முறுவலார்
- பொத்தியார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- போந்தலைப் பசலையார்
- மதுவோலைக் கடையத்தார்
- மாற்பித்தியார்
- மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
- மாறோக்கத்து நாப்பசலையார்
- முள்ளியூர் பூதியார்
- முன்னியூப் பூதியார்
- வரதுங்க ராமன் தேவியார்
- வருமுலையாருத்தி
- வில்லிபுத்தூர்க் கோதையார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியர்
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads