நித்தியா ரவீந்திரன்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
நித்ய ரவீந்திரன் (Nithya Ravindran) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாள திரைப்படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார்.[1]
பின்னணி
இவரது தந்தை 'சென்னை அணு மின் நிலையத்தில்' அரசு ஊழியராகவும், தாய் குடும்பத் தலைவியாகவும் இருந்தார். இவரது தந்தைக்கு ஒரு நாடக குழு இருந்தது. இவர் தனது தந்தையின் நாடகங்களில் குழந்தை கலைஞராக நடிக்கத் தொடங்கினார். இவருக்கு ஒரு தங்கையாக ஜெயஸ்ரீ என்பவரும், அக்காளாக கல்யாணி என்பவரும் உள்ளனர். சென்னையின் ஸ்டெல்லா மாத்துடினா கல்வியியல் கல்லூரியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். போதுமான நாட்கள் பள்ளிக்கு வராததன் காரணமாக இவர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அதற்குள் திரைப்படங்களில் நடிப்புப்பணி மிகுந்துவிட்டதால் ஒன்பதாம் வகுப்பில் படிப்பை கைவிட்டார். 1969 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான குருதிக்களம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நித்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த இவர் பின்னர் கதாநாயகி ஆனார். இவர் சில தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த ரவீந்திரனை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.[2] இவர் பல மொழி தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் பின்னணி குரல் கலைஞராக உள்ளார்.
Remove ads
தொலைக்காட்சி
Remove ads
திரைப்படவியல்
Remove ads
பின்னணிக் குரல்
- திரைப்படங்கள்
- தொலைக்காட்சித் தொடர்கள்
- ராணி (விழுதுகள்)
- பபிதா (அக்சயா)
- ரேடியோ குரல் ( ரமணி விசஸ் ரமணி பகுதி -2 )
- நளினி (அனைத்து தமிழ் தொடர்களும்)
- ஜானவி (நம்பிக்கை) (முதல் சில அத்தியாயங்கள்)
- ஜோதி லட்சுமி ( அண்ணாமலை ) (முதல் சில அத்தியாயங்கள்)
- கல்பனா ( சின்ன பாப்பா பெரிய பாப்பா )
- ஸ்ரீ லட்சுமி (ருத்ரா)
- சீமா ( தங்கம், வம்சம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் )
- மாளவிகா அவினாஷ் (அரசி)
- சுதா சந்திரன் (அரசி)
- விஜி சந்திரசேகர் ( சந்திரகுமாரி )
- வினயா பிரசாத் ( ரோஜா )
- பூர்ணிமா பாக்கியராஜ் ( சூர்யவம்சம் )
- அம்பிகா ( திருமதி ஹிட்லர் )
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads