ஐ.எசு.ஓ 4217

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐ.எசு.ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.[1][2][3]

குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும்.

இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) மௌரித்தானியா தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.

ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன், வெள்ளி, பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.

பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது.

Remove ads

பயன்பாட்டிலுள்ள குறியீடுகள்

மேலதிகத் தகவல்கள் குறியீடு, இல ...
Remove ads

பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள்

யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டவை

பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் குறியீடு, இல ...

வேறு காரணங்களுக்காக பிரதியீடு செய்யப் பட்டவை

மேலதிகத் தகவல்கள் குறியீடு, இல ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads