சூரியக் கோயில்கள்

மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடம் From Wikipedia, the free encyclopedia

சூரியக் கோயில்கள்
Remove ads

சூரியக் கோயில் (Sun temple) என்பது மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடமாகும். அதாவது பிரார்த்தனைகளுக்காவும் தியாகங்களுக்காகவும் இது அமைக்கப்பட்டது. சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இத்தகைய கோயில்கள் பல்வேறு கலாச்சாரங்களால் கட்டப்பட்டவை. இந்தியா, சீனா, எகிப்து, யப்பான், பெரு உள்ளிட்ட உலகம் முழுவதும் இது போன்றக் கோயில்கள் பரவலாக காணப்படுகின்றன. சில கோயில்கள் இடிந்து கிடக்கின்றன. சில அகழ்வாராய்ச்சி, பாதுகாப்பு அல்லது மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளன. மேலும் சில உலகப் பாரம்பரியக் களங்களாக தனித்தனியாக அல்லது கொனார்க் போன்ற பெரிய களத்தின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

Thumb
கதார்மல் சூரியக் கோயில் வளாகம், அல்மோரா மாவட்டம், உத்தராகண்டம்
Thumb
கொனார்க் சூரிய கோயிலின் சூரிய தேரின் சக்கரம்
Remove ads

சீனா

Thumb
மேற்கு புனித வாயில், சூரியன் கோயில் (பெய்சிங்)

சீனாவின் பெய்சிங்கில் உள்ள சூரிய ஆலயம் 1530ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது ஜியாஜிங் பேரரசரால் கட்டப்பட்டது,[2] இதில் பூமிக்கும் சந்திரனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோயில்களும், சுவர்க்க ஆலயத்தின் விரிவாக்கமும் இருந்தது. அனைத்து கோயில்களையும் உள்ளடக்கிய ஓராண்டுகால சடங்குகளின் ஒரு பகுதியாக, உண்ணாவிரதம், பிரார்த்தனை, நடனம், விலங்கு பலி ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்திய அரசவையால் சூரிய ஆலயம் பயன்படுத்தப்பட்டது.[3] இக்கோயிலில் சிவப்பு நிறம் முக்கியமானதாக இருக்கிறது. இது சூரியனுடன் தொடர்புடையது. உணவு மற்றும் வைன் பிரசாதங்களுக்கான சிவப்பு பாத்திரங்கள் மற்றும் விழாக்களில் சக்கரவர்த்தி அணியும் சிவப்பு ஆடைகள் உட்பட அனைத்து சிவப்பு பொருள்களும் இந்த கோயிலில் தான் உண்டு. இந்தக் கோயில் இப்போது ஒரு பொது பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.[4]

Remove ads

எகிப்து

Thumb
ஊசர்க்காபு கோயிலின் திட்டம்

பண்டைய எகிப்தில் சூரியக் கடவுளான இராவுக்கு பல கோயில்கள் இருந்தன. இந்த பழைய நினைவுச்சின்னங்களில் இரண்டாம் ராமேசசுவின் ஆட்சிக் காலத்தில் சூரியக் கடவுளான ராவுக்கு அபு சிம்பெல் நகரத்தில் அபு சிம்பெல் கோயில்கள்[5] உள்ளது. எகிப்தின் ஐந்தாம் வம்சத்தின் ஊசர்க்காபு, நியூசெர்ரே இனி காலத்தில் கட்டப்பட்ட வளாகங்களில் இரண்டு மட்டுமே இன்று இருக்கின்றன.[6] ஐந்தாவது வம்ச கோவில்கள் வழக்கமாக மூன்று கூறுகளைக் கொண்டிருந்தன. அதிக உயரத்தில் ஒரு பிரதான கோயில் கட்டிடம், ஒரு சிறிய நுழைவாயில் கட்டிடத்திலிருந்து ஒரு உயரமான பாதை மூலம் அணுகப்பட்டது.[7] 2006 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கெய்ரோவில் ஒரு சந்தையின் அடியில் இடிபாடுகளைக் கண்டறிந்தனர். இது இரண்டாம் ராமேசஸால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலாக இருக்கலாம்.[8][9]

Remove ads

இந்தியத் துணைக்கண்டம்

Thumb
கொனார்க் சூரியக் கோயிலின் அகலப்பரப்புக் காட்சி

இந்தியத் துணைக்கண்டத்தின் சூரியக் கோயில்கள் எல்லாம் இந்து கடவுளான சூர்ய தேவனுக்கு மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் ஆகும்.[10] ஒடிசாவின் கொனார்க்கிலுள்ள கொனர்க் சூரியக் கோயிலும் (கருப்பு பகோடா என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது கருப்பு கோயில் என அர்த்தம் உண்டு) ஒன்றாகும் இதில். இக்கோயில் சூரிய தேவனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[11][12]

குசராத்த்தின் மொதெராவிலுள்ள சூரியன் கோயிலும் அவற்றில் மிக முக்கியமானது. இவைகள் கிபி 1026 - கிபி 1027 ஆண்டுகளில் கட்டப்பட்டன. படையெடுப்பால் அழிக்கப்பட்ட நிலையில் இவை இரண்டும் இப்போது இடிபாடுகளாக இருக்கின்றன.

கொனார்க் சூரியக் கோயில் கீழைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன்[13][14] என்ற மன்னனால் கிபி 1250 ஆண்டில் கட்டப்பட்டது. இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌர மதத்தில் சூரிய தேவன் தான் முக்கிய கடவுள் ஆவார். அதன் பேரிலேயே சூரிய தேவனுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டதாக உண்டு. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர்கள், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுலுள்ளன.

Thumb
மார்த்தாண்ட சூரியன் கோயில் முதன்மைப் பகுதிக்குச் செல்லும் நுழைவாயிலிலிருந்து காணும் இடிபாடுகளின் தோற்றம்

குசராத்து சூரியக் கோயில், சௌராட்டிர நாட்டை ஆண்ட சோலாங்கி வமிச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவி உதயமதியால், மொதெரா நகரத்தில், கி. பி., 1026 இல் கட்டி சூரிய பகவனுக்கு அர்பணிக்கப்பட்டது. அழகிய சிற்பங்களும் கலை நுணுக்கங்களுடன் கூடிய இப்பெரிய சூரியன் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை வசம் உள்ளது.

Thumb
குஜராத் மொதேரா சூரியக் கோயிலிலுள்ள குளத்தின் அகலப்பரப்பு காட்சி

இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள மற்ற சூரிய கோயில்கள் பின்வருமாறு:

Remove ads

பெரு

Thumb
மேலே சாண்டோ டொமிங்கோவின் சர்சுடன் குரிகாஞ்சா

பின்வருபவை இன்டியின் கொலம்பியாவுக்கு முந்தைய கோயில்கள் (இன்கா சூரிய கடவுள்):

  • பெருவின் குசுக்கோவில் உள்ள குரிகாஞ்சா இன்கா பேரரசின் மிக முக்கியமான கோயிலாக இருந்தது.[25]
  • பெருவின் ககுசுக்கோவிலுள்ள முயுக் மார்கா.
  • பெருவின் வில்காசுவாமனில் வில்காவமன்.

மற்றவைகள்

இதைத் தவிர மேலும் பல நாடுகளில் சூரிய கடவுளர்களுக்கு கோயில்கள் உள்ளன:

  • தெற்கு மெக்சிக்கோவில் உள்ள பாலென்கேயின் மாயன் தளத்தில் உள்ள கிராஸ் வளாகத்தில் கோயிலில் உள்ள சூரியன் கோயில், கிபி 200 முதல் கிபி 900 வரை கட்டப்பட்டது.[26][27]
  • குவாத்தமாலாவின் எல் ஸோட்ஸின் மாயன் தளத்தில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டில் கைவிடப்பட்ட சூரியன் கோயில்.[28]
  • யப்பானில் பல ஷின்டோ ஆலயங்கள் உள்ளன. இதில் சூரிய தெய்வமான அமதெரசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது:
  • ஈஸ் பெரிய கோயில், ஈஸ் மாகாணம். [29][30]
  • காமானுராவில் கிபி 710 ஆண்டில் நிறுவப்பட்ட அமனாவா ஷின்மி கோயில்.
  • மியாசாக்கி மாகாணத்தின் தகாச்சிஹோவில் அமனோவாடோ-ஜின்ஜா கோயில்.[31]
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads