2022 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பெண்கள் பிரிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஆகத்து மாதம் 10 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.[1] உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இப்போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது.
1927 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 43 சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 18 தங்கம் 1 வெள்ளிப்பதக்கம் என சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரிந்த உருசியா 8 தங்கம் , 3 வெள்ளி, 3 வெண்கலம் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா 11 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 75 கிராண்டுமாசுட்டர்கள் இருக்கின்றனர்.
Remove ads
போட்டிகள்
சுவிசு முறைமையில் போட்டிகள் நடத்தப்பட்டது. திறவுநிலை மற்றும் பெண்கள் போட்டி என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. ஆட்டத்திற்கான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாக இருந்தது. 40 ஆவது நகர்வுக்குப் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் நேர அதிகரிப்பு ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் என்ற முறையில் வீரர்களின் ஆட்டம் அமைந்தது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டது. ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடினர். ஒரு வீரர் ஓய்வில் இருந்தார். 11 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் ஈட்டும் அணி ஒலிம்பியாடு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.[2]
Remove ads
பெண்கள் போட்டி
பெண்களுக்கான போட்டியில் 160 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 162 அணிகள் பங்கேற்று விளையாடின. நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளை களமிறக்கியது.
போட்டி நடைபெற்ற நாட்களும் சுற்றுகளும்
அணிகள் மற்றும் புள்ளிகள்
44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் அணி வீரர்களின் சராசரி எலோ புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அணிகள் ஈட்டும் புள்ளிகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 11 சுற்றுகளின் முடிவில் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads