முத்துலிங்கம் (கவிஞர்)

From Wikipedia, the free encyclopedia

முத்துலிங்கம் (கவிஞர்)
Remove ads

கவிஞர் முத்துலிங்கம் (Muthulingam, பிறப்பு: 20 மார்ச் 1942)[1][2] தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.

விரைவான உண்மைகள் முத்துலிங்கம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி என்னும் சிற்றூரில் 1942இல்[1] பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார்.[3][4]

திரைப்படத் துறையில்

1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார்.[5] அங்கிருந்தபோது இயக்குநர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது.[6] மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாட்டை முதன் முதலாக எழுதினார்.[7]

அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் என்ற பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.[8] இவர் தன் தாரக மந்திரமாக உழைப்பு, திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனக் கூறியுள்ளார்.[9][10][11]

Remove ads

திரையிசைப் பாடல்கள்

கவிஞர் முத்துலிங்கத்தின் திரைப்பாடல்களை கவிஞரின் நண்பர் கே.பி.பாலகிருஷ்ணன் என்பவர் 1997-இல் முதன்முதல் புத்தகமாக வெளியிட்டார். அதன் பின் 2000-ஆம் ஆண்டில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. 2013-இல் நெல்லை ஜெயந்தாவை உரிமையாளராகக் கொண்ட வாலி பதிப்பகம் வெளியிட்டது. வாலி பதிப்பகம் வெளியிட்டதில் நேரடித் தமிழ்ப் படத்திற்கு கவிஞர் முத்துலிங்கம் எழுதிய இருபத்து நான்கு பாடல்கள் விடுபட்டுவிட்டன.அதற்குப் பதில் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய மொழி மாற்றுப் படங்களின் சில பாடல்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.[12]

விருதுகள்

  • 2013 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கபிலர் விருது.[1][13]
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • கலைத்துறை வித்தகர் விருது
  • கலைமாமணி விருது-1981

புத்தகங்கள்

மேலதிகத் தகவல்கள் கவிதை நூல்கள், சிற்றிலக்கியங்கள் ...

இயற்றிய சில பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ஆண்டு ...
Remove ads

இவரின் திரைப்பட பட்டியல்

1970களில்

1980களில்

  1. 1980- காதல் கிளிகள்
  2. 1980- பாமா ருக்மணி
  3. 1980- ஒரு கை ஓசை
  4. 1980- எங்க ஊர் ராசாத்தி
  5. 1980– எல்லாம் உன் கைராசி
  6. 1980-ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
  7. 1980- நன்றிக்கரங்கள்
  8. 1980- ௭ங்கள் வாத்தியார்
  9. 1981– ராணுவ வீரன்
  10. 1981– மௌன கீதங்கள்
  11. 1981- மௌன யுத்தம்
  12. 1981– இன்று போய் நாளை வா
  13. 1981- பனிமலர்
  14. 1982– தூறல் நின்னு போச்சு
  15. 1982– வாலிபமே வா வா
  16. 1982– கோபுரங்கள் சாய்வதில்லை
  17. 1982– மூன்று முகம்
  18. 1982– டார்லிங், டார்லிங், டார்லிங்
  19. 1982– பயணங்கள் முடிவதில்லை
  20. 1982- ஊருக்கு ஒரு பிள்ளை
  21. 1982- மஞ்சள் நிலா
  22. 1982- மருமகளே வாழ்க
  23. 1983- தூங்காத கண்ணின்று ஒன்று
  24. 1983– முந்தானை முடிச்சு
  25. 1983– பகவதிபுறம் ரயில்வே கேட்
  26. 1983– இளமை காலங்கள்
  27. 1983– தங்கமகன்
  28. 1983– காஷ்மீர் காதலி
  29. 1983– வெள்ளை ரோஜா
  30. 1984– சிரஞ்சீவி
  31. 1984– குடும்பம்
  32. 1984– தீர்ப்பு என் கையில்
  33. 1984– தாவணிக் கனவுகள்
  34. 1984– வெள்ளை புறா ஒன்று
  35. 1984– நூறாவது நாள்
  36. 1984– மெட்ராஸ் வாத்தியார்
  37. 1984– நான் பாடும் பாடல்
  38. 1984– நல்லவனுக்கு நல்லவன்
  39. 1984– அம்பிகை நேரில் வந்தாள்
  40. 1984– குழந்தை யேசு
  41. 1984- புதிய சங்கமம்
  42. 1985- பாடும் வானம்பாடி
  43. 1985– இதய கோவில்
  44. 1985- மூக்கணாங்கயிறு
  45. 1985– கரையை தொடாத அலைகள்
  46. 1985– மண்ணுக்கேத்த பொண்ணு
  47. 1985– ராஜரிஷி
  48. 1985– உதயகீதம்
  49. 1985- திறமை
  50. 1985- கருப்பு சட்டைக்காரன்
  51. 1986– முதல் வசந்தம்
  52. 1986- மௌனம் கலைகிறது
  53. 1986– உனக்காகவே வாழ்கிறேன்
  54. 1986– நான் அடிமை இல்லை
  55. 1986– மீண்டும் பல்லவி
  56. 1986– உயிரே உனக்காக
  57. 1986– மண்ணுக்குள் வைரம்
  58. 1986– எனக்கு நானே நீதிபதி
  59. 1986- கரிமேடு கருவாயன்
  60. 1986- நம்ம ஊரு நல்ல ஊரு
  61. 1987– பூவிழி வாசலிலே
  62. 1987– கூட்டுப்புழுக்கள்
  63. 1987– காதல் பரிசு
  64. 1987– முப்பெரும் தேவியர்
  65. 1987– சிறைப்பறவை
  66. 1988– செந்தூரப்பூவே
  67. 1988– உன்னால் முடியும் தம்பி"
  68. 1988– என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
  69. 1988– இது நம்ம ஆளு"
  70. 1988– புதிய வானம்
  71. 1988– தம்பி தங்கக் கம்பி
  72. 1989– சோலை குயில்"
  73. 1989– வெற்றி மேல் வெற்றி"
  74. 1989– என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்"

1990களில்

  1. 1990– புது வசந்தம்
  2. 1990– பெரியவீட்டுப் பண்ணக்காரன்
  3. 1991– புது நெல்லு புது நாத்து
  4. 1991– இதய வாசல்
  5. 1991- ஈரமான ரோஜாவே
  6. 1991– நாட்டுக்கு ஒரு நல்லவன்
  7. 1991- புதுமனிதன்
  8. 1992– உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
  9. 1992- செம்பருத்தி
  10. 1993- பொன்விலங்கு
  11. 1993- பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது
  12. 1993– கற்பகம் வந்தாச்சு
  13. 1994- வா மகளே வா
  14. 1994- பெரிய மருது
  15. 1994- அதிரடிப்படை
  16. 1995– ராஜாவின் பார்வையிலே
  17. 1999– பூவாசம்
  18. 1999– ராஜஸ்தான்'
  19. அழகேஸ்வரன்
  20. துணையிருப்பாள் பண்ணாரி

2000த்தில்

  1. 2000– கண்ணுக்கு கண்ணாக"
  2. 2001– சிகாமணி ரமாமணி"
  3. 2002– இவன்"
  4. 2004– விருமாண்டி"
  5. 2005– மீசை மாதவன்"
  6. 2005– சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி"
  7. 2005- பொன்மேகலை
  8. 2006- சாசனம்
  9. 2007– மாயக் கண்ணாடி"
  10. 2008– இனி வரும் காலம்"
  11. 2008– தனம்"
  12. 2008- அறை எண் 305ல் கடவுள்
  13. 2009– கண்ணுக்குள்ளே"
  14. 2009– மத்திய சென்னை"

2010களில்

  1. 2011– கால பைரவி"
  2. 2012- மேதை (தமிழக அரசின் விருது)
  3. 2012– படித்துரை"
  4. 2012– அஜந்தா"
  5. 2012– பயணங்கள் தொடரும்"
  6. 2013– மறந்தேன் மன்னித்தேன்"
  7. 2014– வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"
  8. 2015– தரணி"
  9. 2015- புலன் விசாரணை-2
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads