மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி அல்லது ஏ. எஸ். ஜி. லூர்துசாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம் என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பஞ்சப்பூர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் என மொத்தம் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.[2] இது கண்டோன்மென்ட் அருகில் அமைந்துள்ளது.
Remove ads
கண்ணோட்டம்
மாநிலத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள திருச்சிக்கு, இப்பேருந்து நிலையம் ஒரு முக்கியமான போக்குவரத்து புள்ளியாக உள்ளது. இது 4.5 ஏக்கர்களில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கிருந்து தினந்தோறும் 2,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.[3][4]
சேவைகள்

வடக்கு மற்றும் மேற்கே செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கர்நாடக, கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Remove ads
இணைப்பு
மத்திய பேருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 700 மீட்டர்கள் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 5.6 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.
மேலும் காண்க
சான்றுகள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads