விஜயகுமார்
தென்னிந்தியத் திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர், அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயகுமார் (Vijayakumar, பிறப்பு: 29 ஆகத்து 1943) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு (குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில்) நடித்துள்ளார். ஒரு சில இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1961இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக அறிமுகமான இவர், 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாருக்கு அருண் விஜய் என்ற மகனும், கவிதா, அனிதா, வனிதா, பிரீத்தா, சிறீதேவி என ஐந்து மகள்களும் உள்ளனர்.
சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' என்ற தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.
இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.
Remove ads
தொழில் வாழ்க்கை
1961 ஆம் ஆண்டில் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் குழந்தை நடிகராக இவரது பயணம் தொடங்கியது . சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் நடித்த இப்படத்தில் சிறுவயது முருகனாக விஜயகுமார் நடித்தார். அதன் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும், இவர் கந்தன் கருணை திரைப்படத்தில் முருகக் கடவுளாக நடிக்கவிருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக சிவகுமார் அந்த வேடத்தில் நடித்தார். சூரபத்மனால் கைது செய்யப்பட்ட பிரபுகளில் ஒருவராக விஜயகுமார் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.
1973 ஆம் ஆண்டில், தேவராஜ்-மோகன் இயக்கிய பொண்ணுக்குக் தங்க மனசுவில் விஜயகுமார் தனது முதல் வெற்றியைப் பெற்றார். இப்படத்தின் மற்றொரு நாயகன் சிவகுமார். பொண்ணுக்கு தங்க மனசு திரைப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது. முன்னணி நடிகர்களுடன் எழுபதுகளில் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். குறிப்பாக எம்.ஜி.ராமச்சந்திரன் உடன் இன்று போல் என்றும் வாழ்க,சிவாஜி கணேசன் உடன் தீபம், கமல்ஹாசன் உடன் நீயா போன்ற திரைப்படங்களில் நடித்தார். 1970களில் விஜயகுமார் ஒரு பிரபலமான துணை நடிகராக இருந்தபோது, அவள் ஒரு தொடர்கதை, மதுர கீதம், அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
1980களின் முற்பகுதியில் ஒரு சிறிய சரிவைச் சந்தித்த பிறகு, விஜயகுமார் இரண்டாவது 1988 ஆம் ஆண்டில் நடிக்கத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில், பிரபு, கார்த்திக் இருவருக்கும் தந்தையாக நடித்தார். 1990களில், இவர் நடித்த நாட்டாமை, கிழக்குச் சீமையிலே, பாட்ஷா ஆகிய திரைப்படங்கள் இவர் திரைப்பயணத்தில் முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளில், திரைப்படங்களை விட தொலைக்காட்சித் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜயகுமார் இதுவரை மொத்தமாக 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
அவர் 2015 அக்டோபர் 18 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராகவும் இருந்தார்.
2016 மார்ச் 16 அன்று, விஜயகுமார் பாஜகவில் இணைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
விஜயகுமாரின் மனைவிகள் முத்துகண்ணு, மஞ்சுளா.
முத்துக்கண்ணுவின் வழியே வந்த பிள்ளைகள் கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோராவர்.
மஞ்சுளாவின் வழியே வந்த பிள்ளைகள் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோராவர்.
இதுவரை, அருண் விஜயும் அவரது தந்தையான விஜயகுமாரும் நான்கு முறை மட்டுமே திரையில் ஒன்றாக நடித்துள்ளனர். அவை, பாண்டவர் பூமி, மலை மலை , மாஞ்சா வேலு, குற்றம் 23.
2013 சூலை 23 அன்று, விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா சென்னையில் இறந்தார். அவருக்கு வயது 59.
Remove ads
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
2010 களில்
2000 களில்
1990 களில்
1980 களில்
1970 களில்
1960 களில்
Remove ads
தொலைக்காட்சித் தொடர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads