ஆக்டினைடு

From Wikipedia, the free encyclopedia

ஆக்டினைடு
Remove ads

ஆக்டினைடுகள் (Actinide) என்பவை தனிம வரிசை அட்டவணையில் ஆக்டினியம் தனிமத்தைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களைக் குறிக்கும். ஆக்டினியம் தனிமத்தையும் சேர்த்தால் மொத்தமாக 15 ஆக்டினைகள் காணப்படுகின்றன. இவற்றின் அணு எண்கள் 89 இல் தொடங்கி 103 வரை உள்ளன. ஆக்டினியம் தொடங்கி லாரன்சியம் [2][3][4][5] வரையுள்ள இத்தனிமங்கள் 5f ஆர்பிட்டலில் இடப்படுவதால் இவற்றை 5f தொகுதி தனிமங்கள் என்றும் அழைக்கிறார்கள்.

89
Ac
90
Th
91
Pa
92
U
93
Np
94
Pu
95
Am
96
Cm
97
Bk
98
Cf
99
Es
100
Fm
101
Md
102
No
103
Lr
மேலதிகத் தகவல்கள் தனிம அட்டவணையில் ஆக்டினைடுகள் ...
Thumb
நாகசாக்கியில் வீசப்பட்ட அணுகுண்டில் புளுட்டோனியம் இருந்தது.[1]

மிகச் சரியாகச் சொல்வதென்றால் ஆக்டினியம் மற்றும் லாரன்சியம் என்ற இரண்டு தனிமங்களையும் மூன்றாவது நெடுங்குழு தனிமங்கள் என்றுதான் அடையாளப்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலும் பொது வேதியியல் விவாதங்களின் போது வேதியியல் அறிஞர்கள் இவ்விரண்டு தனிமங்களையும் ஆக்டினைடு தனிமங்கள் என்றே கருதுகின்றனர். ஆக்டினியம் லாரன்சியம் என்ற இரண்டு தனிமங்களை ஒப்பிடுகையில் ஆக்டினியம் என்ற தனிமம் ஆக்டினைடு என்ற தொடரிலிருந்து விலக்கப்படுவது உண்டு. ஏனெனில் 3 ஆவது குழு தனிமங்களுடன் இது சொற்பொருள் சார்ந்து ஒத்திருக்கிறது. ஆக்டினியத்தைத் தொடர்ந்து வருகின்ற தனிமங்கள் ஆக்டினைடுகள் ஆனால் ஆக்டினியம் ஓர் ஆக்டினைடு அல்ல என்று வாதிடுவோரும் உண்டு. ஐயுபிஏசியும் கூட பொதுப்பயன்பாடு கருதியே அக்டினியத்தை ஆக்டினைடு குழுவில் சேர்த்துக் கொண்டது [6].

ஆக்டினைடு தனிமங்கள் என்ற தொடர் ஆக்டினியம் என்ற தனிமத்தில் இருந்து தொடங்குகிறது. விவாதங்களின் போது ஆக்டினைடுகளைப் பொதுவாகக் குறிப்பிட முறைசாரா வாய்ப்பாடாக An என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை பயன்படுத்துவார்கள். இக்குறியீடு எந்த ஒரு ஆக்டினைடையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு தனிமத்தைத் தவிர மற்ற அனைத்தும் f தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விலக்கப்படுவது ஆக்டினியம் அல்லது லாரன்சியம் இரண்டில் ஒன்று ஆக்டினைடு தொடரில் இருந்து நீக்கப்படுகிறது. ஆக்டினைடுகளின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு உறுதியாக நிறுவப்படவில்லை. ஏனெனில் வேறுபடுத்தும் எலக்ட்ரான்கள் 5f ஆர்பிட்டலில் நுழைகிறதா அல்லது 6s ஆர்பிட்டலில் நுழைகிறதா என்பதை இன்னமும் நிர்ணயிக்க இயலவில்லை. லாந்தனைடுகளுடன் ஒப்பிடுகையில் ஆக்டினைடுகள் கதிரியக்கப்பண்பு, அயனிகளின் காந்தப்பண்பு, நிறம், ஆக்சிசனேற்ற நிலை என்று பல பண்புகளில் மாறுபடுகின்றன. ஆக்டினைடுகளின் அணு ஆரம், அயனி ஆரம் போன்றவை அதிகமாகும். ஆக்டினைடு தொடர் தனிமங்களின் இயற்பியல் பண்புகள் பெரிதும் மாறுபடுகின்றன. ஆக்டினியம் மற்றும் அமெரிசியத்தை அடுத்துள்ள பின் ஆக்டினைடுகள் லாந்தனைடுகளை ஒத்துள்ளன. தோரியம், புரோட்டாக்டினியம், யுரேனியம் போன்ற தனிமங்கள் இடைநிலைத் தனிமங்களை ஒத்தவையாக உள்ளன. நெப்டியூனியம் மற்றும் புளூட்டோனியம் போன்றவை இவ்விரண்டுக்கும் இடைபட்ட தன்மையைக் கொண்டுள்ளன.

Remove ads

ஆக்சிசனேற்ற நிலை

ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிசனேற்ற நிலை +3 ஆகும். அணு எண் அதிகரிக்கும் போது ஆக்சிசனேற்ற நிலையின் நிலைப்புத்தன்மையும் அதிகரிக்கிறது. ஆக்டினியமும் தோரியமும் +2 ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளன. ஆக்டினியம் முதல் கியூரியம் வரை உள்ள தனிமங்கள் +4 ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளன.

கதிரியக்கப் பண்பு

அனைத்து ஆக்டினைடுகளும் கதிரியக்கப் பண்பு கொண்டவையாகும் கதிரியக்கச் சிதைவின் பொது இவை ஆற்றலை வெளிவிடுகின்றன. யுரேனியமும் தோரியமும் இயற்கையில் தோன்றும் ஆக்டினைடுகளாகும். புளூட்டோனியம் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் பூமியில் அதிக அளவில் கிடைக்கின்றன. அணுக்கரு உலைகளிலும் அணு ஆயுதங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. தோரியம், புரோட்டாக்டீனியம், யுரேனியம், நெப்டூனியம், புளூட்டோனியம் போன்றவை +5 ஆக்சிசனேற்ற நிலையையும், சில புரோட்டாக்டினியம், யுரேனியம், நெப்டூனியம் போன்ற சில தனிமங்கள் +6 ஆக்சிசனேற்ற நிலையையும் காட்டுகின்றன.

Remove ads

காந்தப்பண்புகள்

ஆக்டினைடுகளின் காந்தப்பண்புகளை f ஆர்பிட்டால்களில் உள்ள இனையாகாத எலக்ட்ரான்கள் நிர்ணயிக்கின்றன. தோரியம் மற்றும் யுரேனியத்தின் வெளிக்கூடுகள் காலியாக இருப்பதால் இவை டயா காந்தப் பண்புடையவையாக உள்ளன. மற்ற ஆக்டினைடு தொடர் தனிமங்கள் யாவும் பாரா காந்தப்பண்பைக் கொண்டுள்ளன. .

கண்டுபிடிப்பு

மேலதிகத் தகவல்கள் தனிமம், ஆண்டு ...
Remove ads

மீள்பார்வை

  • பொதுவாக ஆக்டினைடுகளை வேருபடுத்திக் காட்டும் எலக்ட்ரான்கள் 5f ஆர்பிட்டால்களில் நிரப்புகின்றன.
  • பெரும்பாலான ஆக்டினைடுகள் செயற்கை முறையில் மனிதனால் தயாரிக்கப்படுகின்றன.
  • ஆக்டினைடுகள் தொடரில் உள்ள தனிமங்கள் ஒத்த வடிவுடைமையைக் காட்டுகின்றன.
  • இவற்றின் கதிரியக்கப்பண்பு அதிகமாகும்.
  • ஆக்டினைடுகள் தரும் அணைவுச் சேர்மங்களின் எண்ணிக்கை லாந்தனைடுகளை விட அதிகமாகும்.
  • தோரியமும் யுரேனியமும் தவிர அனைத்து ஆக்டினைடுகளும் பாரா காந்தத் தன்மையைக் கொண்டுள்ளன.


Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads