இந்தக் கட்டுரை தனிமம் பற்றியது.ஆசியக் கண்டம் பற்றிய கட்டுரைக்கு, ஆசியா என்பதைப் பாருங்கள்.
ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.[9] இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும்.[10] இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.