மெய்ட்னீரியம் (Meitnerium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Mt, அணு எண் 109. இது கதிரியக்க செயற்கைத் தனிமமாகும். இதன் ஓரிடத்தானின் (278Mt) அரைவாழ்வுக் காலம் 7.6நொடிகள்.
இத்தனிமம் 1982 ஆம் ஆண்டு ஆகத்து 29ஆம் நாள்ஒரு செர்மானிய ஆய்வுக்குழுவினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தனிமத்தின் பெயர் அணு இயற்பியலிலும் கதிரியக்கத்திலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்த அறிவியலாளர் லீஸ் மெயிட்னர் என்பவரின் பணியைப் போற்றும் வகையில் மெய்ட்னீரியம் என்று சூட்டப்பட்டுள்ளது.