தென்னிசீன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உனுன்செப்டியம் (Ununseptium) என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கிய அணுவெண் 117 ஐக் கொண்ட வேதியியல் தனிமம்.[3][4] இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து Uus. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது [5]. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 நேர்மின்னிகளும், 28 நொதுமிகளும் கொண்ட கால்சியம்-48 என்னும் ஓரிடத்தான்களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட பெர்க்கிலியம்-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.
Remove ads
வரலாறு
கண்டுபிடிப்பு
சனவரி மாதம் 2010 இல், முதன்முதல் அணு இயைபியலுக்கான ஃவிலெரோவ் ஆய்வகத்தில் (Flerov Laboratory of Nuclear Reactions) அறிவியலாளர்கள் அணுவெண் 117 ஐக் கொண்ட புதிய தனிமத்தை அணுச்சிதைவு விளைவுகளில் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.:[4]
வெறும் ஆறு அணுக்கள் மட்டுமே செயறையாக உருவாக்கப்பட்டன[6].
- Calculated decay chains from the parent nuclei 293Uus and 294 Uus
ஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை
கருத்தியக் கொள்கைப்படியான கணிப்பீடுகள்
நொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள்
கீழுள்ள அட்டவணை வெவ்வேறு எறிபொருள் (projectile) கூட்டங்களும் அதன் குறுக்குவெட்டு வீழ்வுகளும் (residue) பற்றிய தகவல்களைத் தருகின்றது. DNS = Di-nuclear system; σ = cross section
Remove ads
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads