வெண்கந்தகம்

From Wikipedia, the free encyclopedia

வெண்கந்தகம்
Remove ads

வெண்கந்தகம் அல்லது தெலூரியம் (ஆங்கிலம்: Tellurium (IPA: /tiˈlʊəriəm, tɛ-/) என்பது பளபளப்பான வெண்சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு வேதியியல் தனிமம். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Te. இதன் அணுவெண் 52 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு பளபளப்பான வெண்சாம்பல் நிறத்துடன் வெள்ளீயம் போல் உள்ள, ஆனால் எளிதில் உடைந்து நொருங்கக்கூடிய தன்மை உடைய நொறுநொறுப்பான மாழையனை வகையைச் சேர்ந்த தனிமம். வெண்கந்தகம் வேதியியல் பண்புகளில் செலீனியம், கந்தகம் போன்றது. இது பெரும்பாலும் காலியம் ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களில் அதன் மின்கடத்துமை வகையை மாற்றும் மாசூட்டுப் பொருளாக பயன்படுகின்றது..

விரைவான உண்மைகள் தெலூரியம், தோற்றம் ...
Remove ads

குறிப்பிடத்தக்க பண்புகள்

வெண்கந்தகம், ஆக்ஸிஜன், கந்தகம், செலீனியம், பொலோனியம் அடங்கிய வேதியியல் குழுவை சேர்ந்த அருகியே கிடைக்கும் ஒரு தனிமம். இக்குழுவைச் சால்க்கோஜென் என்றும் அழைப்பர்.

பயன்பாடுகள்

வரலாறு

டெலூரியம் என்னும் சொல் இலத்தீன் மொழிச் சொல்லாகிய tellus (டெல்லஸ் = மண், நிலம்) என்ப்தைல் இருந்து ஆக்கியது. இத்தனிமத்தை 1782 ஆண்டில் அங்கேரியர் பிரான்சு-ஜோசெப் மியுல்லர் வான் ரைசஷென்ஸ்டைன் (Franz-Joseph Müller von Reichenstein) என்பார் சிபு என்னும் ஊரில் நாகிசேபென் என்னும் இடத்தில் கண்டுபிடித்தார். இவ்விடம் தற்காலத்தில் ருமானியா நாட்டின் நடு மேற்குப் பகுதியில் உள்ளது (இது டிரான்ஸ்சிலவேனியா என்னும் பகுதியைச் சார்ந்தது). 1789ல் பால் கிட்டைபெல் என்னும் இன்னொரு அங்கேரியர் இதே தனிமத்தை தானும் கண்டுபிடித்தார் ஆனால் முதலில் கண்டுபிடித்தப் பெருமையை மியுல்லருக்கே தந்தார். 1798ல் மார்ட்டின் ஹைன்ரிஷ் கிலாப்ரோத் ([Martin Heinrich Klaproth) இத்தனிமத்தை பிரித்தெடுத்து பெயர் சூட்டினார்.

வெண்கந்தகத்தை முதல் அணுகுண்டு செய்தபொழுது வெளிக்கூட்டுக்கு வேதிப்பிணைப்புப் பொருளாகப் பயன்படுத்தினர். 1960களில் வெப்பவேறுபாட்டால் மின்னாற்றல் பெறும் வெப்பமின்னாக்கிகளுக்குப் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads