இரதர்ஃபோர்டியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரதர்ஃபோர்டியம் (Rutherfordium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமத்தினை எகா-ஆஃபினியம் மற்றும் உன்னில்குவாடியம் என்றும் அழைப்பார்கள். இதன் குறியீடு Rf, அணு எண் 104. இத்தனிமம் கதிரியக்கத் தனிமம் ஆகும். இது இயற்கையாக அமையும் தனிமம் அன்று. இதன் ஓரிடத்தான் 265Rf அதிகபட்சமாக 13 மணிநேரம் அரைவாழ்வுக் காலம் மட்டுமே கொண்டுள்ளது.
தற்போதைக்கு இத்தனிமத்தினால் எப்பயனும் இல்லை. ஆஃபினியம் தனிமத்தின் வேதியியல் பண்புகள் இத்ற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
இத்தனிமம் எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டிற்குப் பின் பெயரிடப்பட்டுள்ளது. 1964 இல் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) உன்னில்குவாடியம்(unnilquadium) (Unq) என்று தற்காலிகமாக பெயரிட்டது. 1997 இல் இரதர்ஃபோர்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads