கோப்பர்நீசியம் (Copernicium) ஒரு வேதியியல் தனிமம். இந்த தனிமம் முதன் முதலாக இது தனிம அட்டவணையில் 2009 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இதன் குறியீடு Cn, அணுவெண் 112. இதுதான் வேதி அட்டவணையில் உள்ள மிகக் கனமான தனிமம்.
இத்தனிமம் முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு Gesellschaft für Schwerionenforschung என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயர் கொடுக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் தற்போது நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் நினைவாக கோப்பர்நீசியம் என்ற பெயரைப் பரிந்துரைத்து[5] அதனை ஐயூபேக்2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது[6]