தூப்னியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூப்னியம் (Dubnium) என்பது Db என்ற குறியீட்டையும் அணு எண் 105 ஐயும் கொண்ட ஒரு யுரேனியப் பின் தனிமமாகும். கதிர்வீச்சுக் கொண்ட இத்தனிமம் செயற்கையில் மனிதனால் ஆக்கப்பட்ட 13 வது தனிமம் ஆகும். இதன் அரை வாழ்நாள் 1.6 வினாடியாகும். இது இயற்கையாகக் கிடைக்கவில்லை, உருசியாவின் தூப்னா என்ற நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நிலையான ஓரிடத்தான், தூப்னியம்-268, இன் அரைவாழ்வுக் காலம் 28 மணிகள் ஆகும்.
1960களில், சோவியத் ஒன்றியத்திலும், கலிபோர்னியாவிலும் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தூப்னாவில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான மையம் இதற்கு நீல்சு போரின் நினைவாக நீல்சுபோரியம் (nielsbohrium, Ns) எனப் பெயரிட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இதற்கு ஓட்டோ ஹான் என்பவரின் நினைவாக ஹானியம் (hahnium, Ha) எனப் பெயரிட்டது. ஆனாலும், 1997 ஆம் ஆண்டில் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) அதிகாரபூர்வமாக தூப்னியம் எனப் பெயரிட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads