தூய்மையான இந்திய நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

தூய்மையான இந்திய நகரங்களின் பட்டியல்
Remove ads

தூய்மையான இந்திய நகரங்களின் பட்டியல் (List of cleanest cities in India) தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை ஆண்டுதோறும் தேசிய அளவில் நகர மதிப்பீட்டை வெளியிடுகின்றன. இந்த மதிப்பீட்டில் சுமார் 500 நகரங்கள் மதிப்பிடப்படுகின்றன. இது இந்தியாவில் நகர்ப்புற மக்களில் 72 சதவீதத்தை உள்ளடக்கியது.

தூய்மையான நகரங்கள்: இந்தியா
இந்தோர்

அம்பிகாபூர், அகமதாபாது, உஜ்ஜைன்
Thumb
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: மங்கல் நகரப் பகுதி (விஜய் நகர்), ராசவாடா அரண்மனை, டாலி கல்லூரி, அட்டல் விகாரி வாஜ்பாயி பிராந்தியப் பூங்கா, பட்டல்பனி அருவி
நகரம்: இந்தோர்
மாகாணம்: மத்தியப் பிரதேசம்
நாடு: இந்தியா
எப்போதிருந்து: மார்ச் 2017
மதிப்பீட்டு வாரியம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
மதிப்பீட்டுத் திட்டம்: தூய்மை இந்தியா இயக்கம்
மைசூர்

இந்த கணக்கெடுப்பின் நோக்கத்திற்காக 2017வரை இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நகரமும் 19 குறிகாட்டிகளில் அடிப்படியில் வகைப்படுத்தப்பட்டன. நகரங்கள் பச்சை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களாக வகைப்படுத்தப்பட்டன. பச்சை தூய்மையான நகரம், மற்றும் சிவப்பு மிகவும் மாசுபட்டது என்பது இதன் பொருள். எந்த நகரங்களும் பச்சை நிறமாக மதிப்பிடப்படவில்லை. இருப்பினும், 2017-18 புலன்களின் கணக்கெடுப்பின் போது, மதிப்பீட்டின் அளவுருக்கள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் நகரங்கள் மக்கள்தொகையின் அடிப்படையில், பெரும்நகரங்கள், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நகரம் என வகைப்படுத்தப்பட்டன. மேலும் இந்த வகைப்படுத்தலின் படியே மதிப்பீடு நடந்தது. [1]

அண்மைய தரவரிசையின் (2020)ஸ்வச் சுரேக்ஷன் படி இந்தோர் தூய்மையான நகரமாகவும், சூரத்து இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாகவும் தரப்படுத்தப்பட்டன.[2][3][4]

Remove ads

சுருக்கம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தூய்மை குறியீட்டின் அடிப்படையில் நகரங்களை வரிசைப்படுத்துகிறது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் தரப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நகரங்களைச் சுருக்கமாகக் கூறுகிறது.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, முதலில் ...
Remove ads

2019-2020

நாடு தழுவிய வருடாந்திர தூய்மை ஆய்வின் ஐந்தாவது பதிப்பான 'ஸ்வச் சர்வேஷன் 2020 ' முடிவுகள் வெளிவந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மீண்டும் இந்தியாவின் தூய்மையான நகரமாக மாறியுள்ளது. குஜராத்தின் சூரத் இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாக உருவெடுத்தது. இதன்பின்னர் நவி மும்பை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சின் ஸ்வச்ச்தா நகர ஆய்வு அறிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[5][6][7]

ஸ்வச் சர்வேஷன் 2020 4,242 நகரங்கள், 62 கன்டோன்மென்ட் போர்டுகள் மற்றும் 92 கங்கா நகரங்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வு 28 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.[8]

இந்தியாவில் 2020 தூய்மையான நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் ஸ்வச் சர்வேஷன் தரவரிசை, நகரம் ...
Remove ads

2017-2018

2017–18 கணக்கெடுப்பின் போது மதிப்பீட்டின் பரிமாணங்கள் அதிகரித்தன. சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் தூய்மை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் நகரங்களும் மாநிலங்களும் அடையாளம் காணப்பட்டது.

2016–2017

ஸ்வச் சர்வேஷன் 2017 என்பது இந்தியாவின் 500 நகரங்களில் விரிவான சுகாதாரக் கணக்கெடுப்பாகும். இந்த கணக்கெடுப்பை நடத்த நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியத் தர கழகத்தினை நியமித்தது; 2014இல் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் முன்னேற்றம் மற்றும் தாக்கத்தைத் சரிபார்க்க ஏற்படுத்தப்பட்டது. இது நகரங்களிடையே அவற்றின் சுகாதார நிலை குறித்த போட்டி உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது சுகாதார நிலை குறித்த விரிவான மதிப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது.

ஒவ்வொரு நகரத்தின் செயல்திறனும் ஐந்து முக்கிய கருப்பொருள் அளவுருக்களிலன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது- நகரத் திடக்கழிவுகள் - மேலாண்மை-சேகரித்தல் மற்றும் போக்குவரத்து நகராட்சி திடக்கழிவுகள் - திடக்கழிவுகளைப் பதப்படுத்துதல் மற்றும் அகற்றுவது திறந்த மலம் கழித்தல்-இலவச/கழிப்பறைகள் திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பு மற்றும் மின்னணு கற்றல் பொது மற்றும் சமூக கழிப்பறை இடங்களை வழங்குதல் • தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நடத்தை மாற்றம்

ஸ்வச் சர்வெக்ஷன் 2017 ஜனவரி 4 முதல் 2017 பிப்ரவரி 7 வரை நடத்தப்பட்டது.[10] முதல் 30 நகரங்களின் முடிவுகள் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் ஸ்வச் சர்வெக்சன் தரவரிசை, நகரம் ...
Remove ads

2015–2016

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தூய்மை இந்தியா இயக்கம் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கும், 73 நகரங்களைச் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து மதிப்பீடு செய்வதற்கும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தியது. ஸ்வச் பாரத் மிஷனுக்கான முதல் கணக்கெடுப்பு இது. இந்தியத் தர குசுமத்தினால் (கியூசிஐ) நடத்தப்பட்டது. இதற்கு ஸ்வச் சர்வெக்சன் என்று பெயரிடப்பட்டது. இது அனைத்து மாநில தலைநகரங்களையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 53 நகரங்களையும் உள்ளடக்கியது. இதில் தரவு சேகரிப்பு மூன்று நிலைகளை உள்ளடக்கியது - நகராட்சி அமைப்புடன் தொடர்பு, நேரடி கண்காணிப்பு மற்றும் குடிமக்களின் கருத்து. துப்புரவு மற்றும் சுகாதாரத்தில் பின்வரும் ஆறு அளவிடக்கூடிய அம்சங்களில் செய்யப்பட்ட பணிகளை ஸ்வச் சர்வெக்ஷன் மதிப்பீடு செய்தது. திறந்தவிட மலம் கழித்தல்- நகரம் (ODF) மற்றும் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை (SWM) தகவல், கல்வி மற்றும் நடத்தை மாற்றத் தொடர்பு (IEBC) செயல்பாடு • சுத்தம், வீட்டுக்கு வீடு சேகரித்தல் மற்றும் போக்குவரத்து (திடக்கழிவுகள்) திடக்கழிவு பதப்படுத்துதல் மற்றும் அகற்றல் (திடக்கழிவுகள்) பொது மற்றும் சமூக கழிப்பறை இடங்களை வழங்குதல் தனிநபர் கழிப்பறைகளை நிர்மாணித்தல்

ஸ்வச் சர்வெக்ஷன் 2016 ஜனவரி 5 முதல் 2016 ஜனவரி 20 வரை நடத்தப்பட்டது.[12] கிடைக்கக்கூடிய சமீபத்திய ஆதாரங்களின்படி முடிவுகள் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் ஸ்வச் சர்வெக்சன் தரவரிசை, நகரம் ...
Remove ads

2014–2015

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நகரம் ...

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) இந்தியாவின் கூற்றுப்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகக் குறைவான மாசுபட்ட நகரங்களைப் பற்றிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காற்றின் தரத்தின் அடிப்படையில் நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான மாசுபட்ட நகரங்களில் பத்தனம்திட்டா, மங்களூர், வயநாடு, ஹாசன், மற்றும் பாலக்காடு ஆகியவை அடங்கும். கீழேயுள்ள அட்டவணை காற்றில் படிந்துள்ள PM10 அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.[15][16]

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நகரம் ...
Remove ads

2009-2010

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நகரம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads