ஓசுமியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓசுமியம் (Osmium) என்பது Os ஐ குறியீடாகக் கொண்டதும் அணு எண் 76 ஐயும், அணு நிறை 190.2 ஐயும் கொண்ட ஒரு வேதியல் தனிமம் ஆகும். இது பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த உடையும் தன்மையுடைய தாண்டல் உலோகம் ஆகும். இதுவே அதிக அடர்த்தியை உடைய இயற்கையான, நிலையான தனிமமாகும். இதன் அடர்த்தி 22.59 g/cm3 ஆகும். உருகு நிலை 2700 °C. கொதிநிலை 5300 °C க்கும் மேல். ஒப்படர்த்தி 29.48. வலுவெண் 2,3,4 அல்லது 8. மின்விளக்கு இழைகள் செய்யப் பயன்படுகிறது. இது இயற்கையாகவே இரீடியம் மற்றும் பிளாட்டினத்துடன் கலப்புலோகமாகக் காணப்படும். மின்சாரத் தொடுகைகள், பேனா முனைகள் மற்றும் அதிக உறுதித்தன்மையும் தாங்கும் தன்மையும் தேவைப்படும் பல பயன்பாடுகளை உடையது.[2]

Remove ads
பண்புகள்

திண்மையான, படிக உருவுடைய, பிளாட்டின உலோக வகை தனிமமாகும். இதுவே மிகவும் கனம் கூடிய பொருளாகும். சூடாக்கும் போது நச்சு வளிமத்தினை வெளியிடுகிறது. இது பளபளக்கும் சாம்பல் நிறமுடையது. இது மிக அதிகமான வெப்பநிலையிலும் மினுமினுக்கும் தன்மையைப் பேணக் கூடியது.
ஓரிடத்தான்கள்
ஓசுமியத்தின் இயற்கையாகக் காணப்படும் ஏழு ஓரிடத்தான்கள் உள்ளன. இவற்றில் ஆறு நிலையானவை ஆகும். 184
Os, 187
Os, 188
Os, 189
Os, 190
Os, 192
Os (அதிகமாக உள்ளது) என்பவையே நிலையானதாகும் . 186
Os பல ஆண்டுகளின் பின்னர் அல்ஃபா அழிவு மூலம் பிரிகையடையும் இயற்கையான ஓரிடத்தானாகும். இப்பிரிகையடைதல் ஏனையவற்றிற்கும் இருக்கலாமென நம்பப்பட்டாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads