மாசுக்கோவியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உனுன்பென்டியம் (Ununpentium, வேதிக் குறியீடு: Uup) என்பது தனிம அட்டவணையில் உள்ள ஒரு தனிமத்தின் தற்காலிகப் பெயர் ஆகும். அணுவெண் 115 ஐக் கொண்டுள்ள இந்த அதிபாரத் தனிமம் முதற்தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவின் தூப்னாவில் உள்ள அணு ஆய்வுக்கான இணைந்த கல்விநிலையத்தில் உருசிய, அமெரிக்க ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[4][5] இந்த செயற்கைத் தனிமம் தனிமம் 115, அல்லது ஏக்கா-பிசுமத் எனவும் அழைக்கப்படுகிறது. 2015 டிசம்பரில், ஐயூபிஏசி அமைப்பும் தூய, பயன்பாட்டு இயற்பியலின் பன்னாட்டு அமைப்பும் நான்கு புதிய தனிமங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்தன. 2016 சூன் மாதத்தில், ஐயூபிஏசி நிறுவனம் இத்தனிமத்துக்கு மாசுக்கோவியம் (moscovium, குறியீடு: Mc) எனப் பெயரிடப் பரிந்துரைத்தது. இப்பெயர் 2016 இறுதிக்குள் உறுதி செய்யப்படவிருக்கிறது.[6]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
உனுன்பென்டியம் தீவிரமான கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் நிலையான ஓரிடத்தானின் (உனுன்பென்டியம்--289) அரைவாழ்வுக் காலம் 220 மில்லிசெக்கன்களைக் கொண்டது.[7] தனிம அட்டவணையில், இது P-வலயக்குழுவில் உள்ள திரான்சாக்டினைடு (அதிபாரத்) தனிமம் ஆகும். 7வது குழுவின் உறுப்பான இத்தனிமம் அதிபார நெடுங்குழு 15 தனிமங்களில் வைக்கப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads