2022 இல் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:
பொறுப்பு வகிப்பவர்கள்
இந்திய அரசு
மாநில அரசுகள்
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 1 - தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி மாநகரக் காவல் ஆணையரகங்களை தமிழக முதலமைச்சர் முறைப்படி துவக்கி வைத்தார்.
- சனவரி 8 - உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.[7][8]
- சனவரி 12 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 5 சனவரி 2022 அன்று பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு விதி மீறல்கள் குறித்து விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் இந்து மல்கோத்ரா குழுவை நியமித்தது.[9]
- பிப்ரவரி 5 - ஐதராபாத்தில் 216 அடி உயர சமத்துவத்துக்கான இராமானுஜரின் பஞ்சலோகச் சிலையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 5 பிப்ரவரி 2022 அன்று திறந்து வைத்தார்.[10][11][12][13]
- மார்ச் 10 - 2022 ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது.[14] மேலும் பஞ்சாபில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி ஆட்சியை இழந்தது.
- மார்ச் 15 - கல்வி நிலையங்களில் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது சமயக் கடமை அல்ல என கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.[15][16][17][18]
- மார்ச் 16 - ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில ஒருகிணைப்பாளர் பகவந்த் மான், பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.[19][20]
- மார்ச் 21 - பாரதிய ஜனதா கட்சியின் ந. பீரேன் சிங் இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றார்.[21][22]
- மார்ச் 23 - உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக பதவியேற்றார்.[23][24]
- மார்ச் 25 - யோகி ஆதித்தியநாத் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டாம் முறையாக பதவியேற்றார்.[25][26][27]
- மார்ச் 28 - பிரமோத் சாவந்த், கோவா மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக பதவியேற்றார்.[28][29]
- ஏப்ரல் 30 - ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார்.[30][31]
- மே 9 - ச. மாரீஸ்வரன் மற்றும் செ. கார்த்திக் ஆகியோர் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.[32]
- மே 14 - பிப்லப் குமார் தேவ், திரிபுரா மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
- மே 15 - மாணிக் சாகா, திரிபுராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.
- மே 15 -தாய்லாந்தில் நடைபெற்ற பூப்பந்தாட்ட தாமஸ் கோப்பையை இந்திய அணி வென்றது.[33]
- மே 18 - இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.[34][35]
- சூன் 24 - எழுத்தாளர் மாலனுக்கு 2021-ஆண்டிற்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சூன் 30 - மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவ சேனாவின் ஏக்நாத் சிண்டேவும், துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர்.[36][37]
- சூலை 17 - இந்தியாவில் 200 கோடிக்கும் மேலான கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.[38]
- சூலை 25 - திரௌபதி முர்மு 15வது இந்தியக் குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
- சூலை 28 - சென்னையில் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.
- ஆகஸ்டு 6 - 14வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.
- ஆகஸ்டு 11- இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்றார்.
- ஆகஸ்டு 27 - உதய் உமேஷ் லலித், இந்திய உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
- செப்டம்பர் 28 - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை உபா சட்டத்தின் கீழ் சட்ட விரோத அமைப்பு என இந்திய அரசு அறிவித்ததுடன், இவ்வமைப்பின் செயல்பாடுகளை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
- செப்டம்பர் 30 -அனில் சவுகான், இந்திய இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பதவியேற்றார்.[39]
- அக்டோபர் 26 - மல்லிகார்ச்சுன் கர்கெ இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்திய தலைவராக பதவியேற்றார்.[40]
- அக்டோபர் 23 - கோயம்புத்தூர் நகரத்தின் கோடை ஈஸ்வரன் கோயில் எதிரில் காரில் இருந்த எரிவாயு உருளை வெடிகுண்டு வெடித்ததில், அதனை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி இறந்தார்.[41]
- அக்டோபர் 30 - குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரத்தில் பாயும் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி பாலம் இடிந்து 180க்கும் மேற்பட்டோர் பலியானர்கள்.[42]
- நவம்பர் 9 - நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் 50வது இந்தியத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[3]
- நவம்பர் 16 - ஒரு மாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்வுகள் வாரணாசியில் துவங்கியது.[43][44]
- டிசம்பர் 8 - குசராத்து சட்டமன்றத் தேர்தல், 2022 மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022 முடிவுகள் வெளியானது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.
Remove ads
இறப்புகள்
- சனவரி 17 - பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் தமது 83-வது அகவையில் மறைந்தார்.[45]
- சனவரி 23 - இரா. நாகசாமி (பத்ம பூசண் விருது பெற்ற தமிழகத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியியல் அறிஞர்) தமது 91-வது அகவையில் மறைந்தார்.[46][47]
- பிப்ரவரி 6 - பாரத ரத்னா விருது பெற்ற பிரபல திரைப்பட பாடகர் லதா மங்கேஷ்கர் தமது 92 அகவையில் மறைந்தார்.
- ஆகத்து 13 - அகில இந்திய வானொலியில் பெண் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமி தமது 87வது அகவையில் மறைந்தார்.
- செப்டம்பர் 10 - பி. பா. லால், (முன்னாள் தலைமை இயக்குநர், இந்தியத் தொல்லியல் ஆய்வகம்) தமது 101-வது அகவையில் காலமானர்.
- அக்டோபர் 10 - முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் தமது 82-வது அகவையில் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.[48]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads