மார்ச் 2008
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்ச் 2008, 2008 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி பங்குனி மாதம் மார்ச் 13 இல் தொடங்கி ஏப்ரல் 12 இல் முடிவடைகிறது.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
சிறப்பு நாட்கள்
- மார்ச் 6 - மகா சிவராத்திரி
- மார்ச் 20 - மீலாத் நபி நாயகம் பிறந்த நாள்
- மார்ச் 20 - பெரிய வியாழன்
- மார்ச் 21 - பெரிய வெள்ளி
- மார்ச் 21 - பங்குனி உத்தரம்
- மார்ச் 21 - ஹோலி
- மார்ச் 23 - உயிர்த்த ஞாயிறு
நிகழ்வுகள்
செய்திகள் |
- மார்ச் 27: 1860 ஏப்ரல் 9 இல் போனாட்டோகிராஃப் மூலம் எடுவார்ட்-லெயோன் மார்ட்டின்வில் என்பவரினால் பதியப்பட்ட மனிதக் குரல் ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். (நியூயோர்க் டைம்ஸ்)
- மார்ச் 26: எண்டெவர் விண்ணோடம் 16-நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு புளோரிடாவில் இரவுவேளையில் தரையிறங்கியது. (நியூயோர்க் டைம்ஸ்)
- மார்ச் 25: ஆபிரிக்க ஒன்றியத்தின் உதவியுடன் கொமரோஸ் இராணுவம் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சுவான் தீவில் தரையிறங்கியது.(பிபிசி)
- மார்ச் 24:
- பூட்டானில் இடம்பெற்ற முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் பூட்டான் அமைதி மற்றும் செழிப்புக் கட்சி வெற்றி பெற்றது. (ரொய்ட்டர்ஸ்)
- பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுப் ராசா கிலானி தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- மார்ச் 23: ஈராக் போரில் இறந்த ஐக்கிய அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ எட்டியது. (சிஎன்என்)
- மார்ச் 22: சீனக் குடியரசின் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மா யிங்-ஜியோ 58% வாக்குகளைப் பெற்று அதிபரானார். (புளூம்பேர்க்)
- மார்ச் 17: இரண்டாம் உலகப் போரின் போது 645 கடற்படையினருடன் மூழ்கடிக்கப்பட்ட எச்.எம்.ஏ.எஸ். சிட்னி என்ற ஆஸ்திரேலியப் போர்க்கப்பல் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. (ஏபிசி)
- மார்ச் 16:
- இரண்டாம் உலகப் போரின் போது 1941 ஆம் ஆண்டு மூழ்கிய ஜேர்மானியப் போர்க்கப்பலான கோர்மொரான் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- மணிப்பூரில் இராணுவ முகாம் ஒன்று தாக்கப்பட்டதில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மார்ச் 15:
- ஹூ சிங்தாவ் சீன அரசு தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ராணுவக் கமிஷனின் தலைவராகவும் இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார். (சின்ஹுவா)
- சீனாவின் திபெத் சுயாட்சிப் பிரிவில் திபெத்தின் விடுதலையை வேண்டி ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினர் சுட்டதில் 30 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மார்ச் 13: ஈராக்கில் பெப்ரவரி 29 2008 இல் கடத்தப்பட்ட கத்தோலிக்க பேராயர் "மார் பவுலொஸ் ஃப்ராஜ் ராஹோ என்பவரின் இறந்த உடல் மோசுல் நகரில் கண்டெடுக்கப்பட்டது. (ராய்ட்டர்ஸ்)
- மார்ச் 11: என்டெவர் விண்ணோடம் அனைத்துலக விண்வெளி மையத்தை நோக்கி ஏவப்பட்டது. (நாசா)
- மார்ச் 8: மலேசியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. அமைச்சர் டத்தோ சாமிவேலு தோல்வியுற்றார். (சிஎன்என்), (சின்ஹுவா)
- மார்ச் 6:
- இஸ்ரேலின் ஜெரூசலேம் நகரில் யூத மதப் பள்ளி ஒன்றில் அரபு துப்பாக்கிதாரி சுட்டதில் எட்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவரான விக்டர் பூட் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- மார்ச் 4: பாகிஸ்தான் நகரான லாகூரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- மார்ச் 2: ரஷ்யாவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் திமித்ரி மெட்வெடவ் வெற்றி பெற்றார். (தி இன்டிபென்டன்ட்)
- மார்ச் 1:
- ஐரோப்பாவின் பல இடங்களில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தினால் ஆஸ்திரியாவில் 4 பேரும் ஜெர்மனியில் 2 பேரும் செக் குடியரசில் 2 பேரும் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானில் இடம்பெற்ற கலவரங்களை அடுத்து நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (ரொய்ட்டர்ஸ்)
- காசாப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர். (ஜெருசலேம் போஸ்ட்)
- எக்குவாடோரில் கொலம்பிய புரட்சி இராணுவத்தின் இரண்டாவது தலைவர் ராவூல் ரேயஸ் கொலம்பியாவின் இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். (எல் டியெம்போ)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- மார்ச் 29: இலங்கையின் தென்பகுதி மொனராகல மாவட்ட பிரதேசசபை உதவித் தலைவர் முத்துலிங்கம் என்பவர் அவரது வீட்டில் இனந்தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். (டெய்லிமிரர்)
- மார்ச் 26: மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- மார்ச் 25: கிழக்கு மாகாணத்தில் மே 10 இல் இடம்பெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளும் என அக்கட்சி அறிவித்துள்ளது. (தமிழ்நெட்)
- மார்ச் 22: முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசு தெரிவித்தது. (டெய்லிமிரர்), (புதினம்)
- மார்ச் 21: மன்னார் நகரில் இராணுவப் பேருந்து ஓன்று கிளைமோர்த் தாக்குதலுக்குள்ளாகியதில் 2 இரானுவத்தினர் கொல்லப்பட்டு 11 பேர் படுகாயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- மார்ச் 15: மன்னார்ப் பகுதியில் பரப்பாங்கண்டல், சேத்துக்குளம் மற்றும் கீரிசுட்டான் ஆகிய இடங்களில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும் 7 படையினர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மார்ச் 14: மணலாறு, கொக்குதொடுவாயில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் குறைந்ந்தது 15 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மார்ச் 10: கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்தனர். (புதினம்)
- மார்ச் 8:
- மன்னாரில் சேத்துக்குளம் மற்றும் மடுப் பகுதிகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகளின் போது 22 படையினர் கொல்லப்பட்டு 72 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மொனராகலை மாவட்டத்தின் கதிர்காமம் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். (புதினம்), (டெய்லிமிரர்)
- மார்ச் 6: வன்னி கனகராயன்குளம் பகுதியில் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் கொல்லப்பட்டார். (புதினம்)
- மார்ச் 1: வவுனியாவில் இடம்பெற்ற கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (டெய்லிமிரர்)
Remove ads
இறப்புகள்
- மார்ச் 6 - கி. சிவநேசன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (பி. 1957)
- மார்ச் 16 - அநுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)
- மார்ச் 19 - ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)
- மார்ச் 19 - ரகுவரன், தமிழ்த் திரைப்பட நடிகர்
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads