2020 இல் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:
பொறுப்பு வகிப்பவர்கள்
இந்திய அரசு
மாநில அரசுகள்
Remove ads
நிகழ்வுகள்
சனவரி
- 10 – இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 இந்தியா முழுமைக்கும் நடைமுறைக்கு வந்ததது.[1]
- 20 - ஜெ பி நட்டா, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பிப்ரவரி
- 8 – தில்லி சட்டமன்றத் தேர்தல், 2020 நடைபெற்றது.
- 11 – தில்லி சட்டமனறத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
- 24-25 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் இந்திய வருகை [2][3]
- 25 - 27 - வடகிழக்கு தில்லி கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.[4]
மார்ச்
- 20 – சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சி பெரும்பான்மை இழந்ததால், கமல் நாத் மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[5][6]
- 22 - கொரானா வைரஸ் தொற்று காரணமாக 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
- 23 - கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதம அமைச்சர் நரேந்திர மோடி மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு அறிவித்தார்.
ஏப்ரல்
- 1 - ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று அரசாணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
- 23- ஏப்ரல் மாதம் முழுவதும் கொரானா பெருந்தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மே
- 5 – லடாக் பகுதியில் இந்திய-திபெத் ஊடாகச் செல்லும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய-சீன படைவீரர்கள் மோதிக்கொண்டனர்.[7]
- 7 – ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் தொழிலகத்தில் வால்வு வெடித்து வேதியியல் நச்சு வாயு பரவியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.[8]
- 20 – ஆம்புயலால் கிழக்கிந்தியப் பகுதிகள் தேசமுற்றது.
சூன்
- 2-4 – நிசர்கா புயலால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலப் பகுதிகள் சேதமுற்றது.
- 15-16 – இந்திய-சீன எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்த உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்ற்ர எல்லை மோதல்களில் 20 இந்தியப் படைவீரர்களும், 35 அல்லது 43 சீனப்படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.
- 17 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது.[9]
- 25 - இராஜதானி விரைவு வண்டிகள் மற்றும் தொழிலாளர்கள் சிறப்பு தொடருந்துகள் தவிர பிற அனைத்து பயணிகள் தொடருந்துகள் 12 ஆகஸ்டு 2020 வரை நிறுத்தப்பட்டது.
- 29 - இந்திய-சீனா எல்லைப்பதட்டம் காரண்மாக சீனாவின் டிக்டாக், ஹலோ போன்ற 59 செயலிகளை (ஆப்ஸ்) இந்திய அரசு தடைசெய்தது.
சூலை
- 3 உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கொள்ளையர்களுடன் நடைபெற்ற தாக்குதல்களில் 8 காவல்துறையினர் உயிர்நீத்தனர்.
- 3 இந்திய-சீன எல்லைப் பதட்டத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இராணுவப் படைத்தலைவர்களுடன், இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் நிமு எல்லைச் சாவடியில் இந்திய இராணுவ வீரர்களுடன் உரை நிகழ்த்தினார்.[10]
- சூலை 17 - இந்தியாவில் கோவிடு-19 நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியது.[11]
- சூலை 21 - அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- சூலை 20 - பஞ்சாப் மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்ககாலில் இருந்த நச்சுத்தன்மையால் 117 பேர் இறந்தனர்.
- சூலை 29 - 2020 தேசிய கல்விக் கொள்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஆகத்து
- ஆக 5 - அயோத்தியில் குழந்தை இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- ஆக 7 - கேரளத்தின் கோழிக்கோட்டில் தரையிறங்கிய விமானம், ஓடுதளத்தைத் தாண்டி ஓடி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆக 7 - கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
- ஆக 9 - ஆந்திரத்தின் விசயவாடாவில் உள்ள கோவிடு-19 நல மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமுற்றனர்.[12][13][14]
- 9 ஆகஸ்டு - இந்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண்மைச் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், அரியானா மாநில உழவர்கள் நடத்தும் போராட்டங்கள், 2021 ஆண்டிலும் தொடர்ந்தது.
- 31 - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 84-வது வயதில் மறைந்தார்.
செப்டம்பர்
அக்டோபர்
- 3 - லே-மணாலி நகரங்களை இணைக்கும் அடல் சுரங்கச்சாலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
- 8 - இராம் விலாசு பாசுவான், இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் மறைந்தார்.
நவம்பர்
- 23 நவம்பர் 2020 நிவர் புயல் தாக்கியதில், தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
- 30 நவம்பர் 2020 புரேவி புயல் தாக்கியதில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தன.
டிசம்பர்
31 டிசம்பர் முடிய இந்தியாவில் கொரொனா பெருந்தொற்றால் 10.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர், 9.93 மில்லியன் மக்கள் மீண்டனர். 14,900 மக்கள் பலியானர்கள்.
Remove ads
நூல் வெளியீடுகள்
இறப்புகள்
- 4 சனவரி - பி. எச். பாண்டியன், முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்
- 9 பிப்ரவரி -பி. பரமேஷ்வரன் - கேரளா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்
- 7 மார்ச் - க. அன்பழகன், திமுக பொதுச் செயலாளர்
- 22 மார்ச் - விசு, திரைப்பட நடிகர்
- 27 மார்ச் - தாதி ஜானகி, ஆன்மீகத் தலைவர், பிரம்ம குமாரிகள்
- 29 ஏப்ரல் - இர்பான் கான், இந்தித் திரைப்பட நடிகர்
- 30 ஏப்ரல் - ரிஷி கபூர், இந்தித் திரைப்பட நடிகர்
- 29 மே 2020 - அஜித் ஜோகி,சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர்
- 4 சூன் - பாசு சட்டர்ஜி, இந்தித் திரைப்பட இயக்குநர்[15]
- 14 சூன் - சுசாந்த் சிங் ராஜ்புத், இந்தித் திரைப்பட நடிகர்
- 19 சூன் - ஏ. எல். ராகவன், தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்
- 17 ஆகஸ்டு - பண்டிட் ஜஸ்ராஜ் இந்துஸ்தானி இசைக் கலைஞர்
- 20 ஆகஸ்டு - இரகுமான்கான் முன்னாள் தமிழக அமைச்சர், திமுகவின் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
- 31 ஆகத்து - பிரணாப் முகர்ஜி, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
- 6 செப்டம்பர் - கேசவானந்த பாரதி, எட்நீர் மடம்
- 25 செப்டம்பர் - எஸ். பி. பாலசுப்பிரமணியம், திரைப்பட பின்னணிப் பாடகர்
- 27 செப்டம்பர் - ஜஸ்வந்த் சிங், முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
- 8 அக்டோபர் - இராம் விலாசு பாசுவான், இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்
- நவம்பர் 15 - சௌமித்திர சாட்டர்ஜி, வங்காள நடிகர், கவிஞர்
- 25 நவம்பர் - அகமது படேல், இந்திய தேசிய காங்கிரசு கட்சி தலைவர்
- 8 டிசம்பர் - எஸ். ஆர். இராதா முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் (அதிமுக)
- 24 டிசம்பர் - தொ. பரமசிவன், தழிழ் பண்பாட்டு ஆய்வாளர்
- 27 டிசம்பர் - டி. யசோதா, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads