2021 இல் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:
பொறுப்பு வகிப்பவர்கள்
இந்திய அரசு
மாநில அரசுகள்
Remove ads
நிகழ்வுகள்
சனவரி
- 1 சனவரி – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகளுக்கு (2021-22) இந்தியா தேர்வானது.[3]
- 3 சனவரி – கரோனொ வைரசுக்கு சீரம் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிசீல்டு தடுப்பூசியும் செலுத்த இந்திய அரசு அவசர அனுமதி வழங்கியுள்ளது.[4][5]
- 16 சனவரி – கரோனொ வைரசு தடுப்பூசி முதல் கட்டமாக 1.91 லட்சம் பேர் செலுத்திக் கொண்டனர்.[6]
- 26 சனவரி - இந்தியக் குடியரசு நாளின் போது, இந்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை விலக்கக் கோரும் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர், காவல் துறையினரின் தடுப்புக்களைத் தாண்டி, தில்லி செங்கோட்டை எதிரே உள்ள இந்தியக் கொடிக் கம்பத்தில், சீக்கிய சமய குருத்துவார்கள் மீது ஏற்றப்படும் நிசான் சாகிப் கொடியை ஏற்றினர்.[7]
பிப்ரவரி
- 1 பிப்ரவரி - 2021 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.[8]
- 7 பிப்ரவரி - உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தில் நூற்றுக்கணக்காவர்கள் கொல்லப்பட்டனர்.[9]
- 22 பிப்ரவரி -காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வே. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது.[10] எனவே புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவ மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.[11]
- 25 பிப்ரவரி - புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.[12]
- 26 பிப்ரவரி - தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.[13]
மார்ச்
- 10 மார்ச் - உத்தரகாண்ட் மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத்திற்கு பதிலாக தீரத் சிங் ராவத் பதவியேற்றார்.
- 27 மார்ச் - மேற்கு வங்கத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்றது. அசாமில் 72.14% வாக்குகளும்; மேற்கு வங்காளத்தில் 79.79% வாக்குகளும் பதிவானது.[14][15][16]
ஏப்ரல்
- 1 ஏப்ரல் - 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டது.[17]
- 1 ஏப்ரல் - இந்தியாவில் கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவத்துவங்கியது.[18].[19]
- 1 ஏப்ரல் - மேற்கு வங்ககத்தின் சட்டமன்றத் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் அசாம் மாநிலத்தின் 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் அசாமில் 76.96% மற்றும் மேற்கு வங்ககத்தில் 80.43% வாக்குகளும் பதிவானது.[20]
- 6 ஏப்ரல் - கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 3-ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்திற்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 71.79% வாக்குகள் பதிவானது.[21] புதுச்சேரியில் 65%, மேற்கு வங்காளத்தில் 77%, அசாமில் 82%, கேரளாவில் 70% வாக்குகளும் பதிவானது.
- 7 ஏப்ரல் - சத்தீஸ்கர் மாநில சிவப்பு தாழ்வாரப் பகுதியின் காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும், இந்தியப் துணைபடைப்படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 பாதுகாப்புப் படைவீரர்களும், 9 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளும் கொல்லப்படனர்.[22][23][24] இதில் ஒரு பாதுகாப்புப் படைவீரரை மாவோயிஸ்டுகள் பிடித்துக் கொண்டனர். 8 ஏப்ரல் 2021 அன்று மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்த படைவீரரை திரும்ப ஒப்படைத்தது.[25]
- 9 ஏப்ரல் - தன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண் தன் கணவனிடமிருந்து குலா முறையில் மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் மார்க்கம் வழங்கியுள்ளதை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.[26][27][28]
- 10 ஏப்ரல் - 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 5 மாவட்டங்களின் 44 தொகுதிகளுக்கு 4ஆம் கட்டத் தேர்தலில் 78.43% வாக்குகள் பதிவானது. கூச் பெகர் மாவட்டத்தில் நடந்த வன்முறையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானர்கள்.[29]
- 12 ஏப்ரல் - இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பணி ஓய்வு பெற்றார்.
- 13 ஏப்ரல் - சுசில் சந்திரா 24வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார்.
- 17 ஏப்ரல் -2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான 5-ஆம் கட்டத் தேர்தலில் 82.49% வாக்குகள் பதிவானது.[30]
- 20 ஏப்ரல் - கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.[31]
- 23 ஏப்ரல் - இந்தியத் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே பணி ஓய்வு பெற்றார்.
- 23 ஏப்ரல் - 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான 6-ஆம் கட்டத் தேர்தலில் 80.88% வாக்குகள் பதிவானது.[32]
- 24 ஏப்ரல் - நீதியரசர் என். வி. இரமணா இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[33]
- 26 ஏப்ரல் - 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின் 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற ஏழாம் கட்டத் தேர்தலில் 75% வாக்குகள் பதிவானது.[34]
- 29 ஏப்ரல் - 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின் 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற ஏழாம் கட்டத் தேர்தலில் 76.07% வாக்குகள் பதிவானது.[35]
மே
- 2 மே - 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஆளும் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மற்றும் மார்க்சிசிஸ்ட் பொதுவுடமைக் கட்சி கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. தமிழ்நாட்டில் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசை திமுக கூட்டணி வென்றது. புதுசேரியில் நாராயணசாமி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு அரசை, ந. ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.[36]
- 5 மே - மம்தா பானர்ஜி மூன்றாம் முறையாக மேற்கு வங்காள முதலமைச்சராக பதவி ஏற்றார்.[37]
- 9 மே - மு. க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றர்.[38]
- 9 மே - ந. ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றார்.[39][40]
- 10 மே - பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[41]
- 10 மே - அசாம் மாநில முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[42]
- 10 மே - எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[43]
- 10 மே - கே. பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முறையே வேப்பனபள்ளி மற்றும் ஒரத்தநாடு தொகுதிகளிலிருந்து வெற்றி பெற்றதால், தாங்கள் முன்னர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர்.[44][45]
சூன்
- 24 சூன் - ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் எதிர்கால அரசியல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 14 அரசியல் கட்சித் தலைவர்களிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.[46]
சூலை
- 4 சூலை - புஷ்கர் சிங் தாமி உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
- 4 சூலை - உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்ட ஊராட்சிகளின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில், பாரதிய ஜனதா கட்சி 67 மாவட்டத் தலைவர் பதவிகளை கைப்பற்றியது.[47]
- 7 சூலை - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றி விரிவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் தமிழகத்தின் எல். முருகன் தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சராக பதவியேற்றார்.[48]
- 8 சூலை - அண்ணாமலை தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[49]
- 24 சூலை - 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சைக்கோம் மீராபாய் சானு, பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் பாரம் தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[50][51]
- 28 சூலை - பசவராஜ் பொம்மை கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார்.[52]
ஆகத்து
- 1 ஆகத்து - பி. வி. சிந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி 1 ஆகத்து 2021 அன்று வெண்கலப் பதக்கம் வென்றார்[53][54]
- 4 ஆகத்து - லவ்லினா போர்கோஹெய்ன், 2021 டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[55]
- 5 ஆகஸ்டு - 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, ஜெர்மனி அணியை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.[56]
- 5 ஆகத்து- ரவி குமார் தாகியா 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.[57]
- 6 ஆகத்து - ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[58]
- 7 ஆகத்து - நீரஜ் சோப்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில், 7 அகத்து 2021 அன்று 87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்றார்.[59]
- 7 ஆகத்து - பஜ்ரங் புனியா, 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 67 கிலோ பிரிவு மற்போர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[60]
- 15 ஆகத்து - இந்தியா தனது 75வது விடுதலை நாளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி கொண்டாடினார்..[61]
- 22 ஆகத்து - இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார்.[62]
- 23 ஆகத்து - மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக இருந்த ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் 23 ஆகத்து 2021 அன்று மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக முடிசூட்டப்பட்டார்.[63]
- 29 ஆகத்து - 2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக் போட்டிகளில் பவினா படேல் மகளிர் ஒற்றையர் class 4 பிரிவில் மேசைப்பந்தாட்டத்தில் வெள்ளி பதக்கமும், நிசாத் குமார் உயரம் தாண்டுதலில் ஆடவர் T 47 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். வினோத் குமார் ஆடவர்-F 56 பிரிவில் வட்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் தவறான பிரிவில் ஆடியதால் இவரது வெற்றி நிறுத்தி வைக்கப்பட்டது.[64]
- 30 ஆகத்து - அவனி லெகரா, 2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் SH 1 பிரிவில் குறிபார்த்து சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், யோகேஷ் கதுனியாஆடவர் F 56 பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், தேவேந்திர ஜஜாரியா ஆடவர் F 46 பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும், சுமித் ஆன்டில் ஆடவர் F 64 பிரிவில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கமும் வென்றனர்.
- 31 ஆகத்து - மாரியப்பன் தங்கவேலு, 2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில் ஆடவர் T42 பிரிவில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், சரத் குமார் அதே பிரிவில், அதே விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.[65]
- 31 ஆகத்து - சிங்ராஜ் அதான, 2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில் 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கி சுடுதல் SH 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[66]
செப்டெம்பெர்
- 3 செப்டம்பர் - அவனி லெகரா, 2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில் குறி பார்த்துச் சுடுதலில் மகளிர் 50 மீட்டர் SH 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- 3 செப்டம்பர் - பிரவீன் குமார், 2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதல் T 64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[67]
- 3 செப்டெம்பர் - அர்விந்தர் சிங், 2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில் ஆடவர் தனிநபர் வில்வித்தை (ரிகர்வ் பிரிவு) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[68]
- 4 செப்டெம்பர் - 2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில் ஆடவர் கலப்பு 50 மீட்டர் SH 1 பிரிவு சிறு கைத்துப்பாக்கியால் சுடுதல் போட்டியில் மணீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதான முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.[69]
- 4 செப்டெம்பர் - பிரமோத் பகத், 2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில் இறகுப் பந்தாட்டப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[70]
- 5 செப்டெம்பர் - கிருஷ்ண நாகர், 2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில் இறகுப் பந்தாட்டப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SH 6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[71]
- 13 செப்டெம்பர் - புபேந்திர படேல் (பாரதிய ஜனதா கட்சி) குஜராத்தின் 17-வது முதலமைச்சராக பதவியேற்றார்.[72]
- 18 செப்டம்பர் - ஆர். என். ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றார்.[73]
- 18 செப்டெம்பர் - பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பதவி துறந்தார்.[74]
- 20 செப்டம்பர் - பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.[75]
- 26 செப்டெம்பர்- குலாப் புயல், வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் - தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.[76]
அக்டோபர்
- 8 அக்டோபர் - ஏர் இந்தியாவை டாடா குழுமம் ரூபாய் 18,000 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.[77][78]
- 9 அக்டோபர் - ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.[79][80]
- 21 அக்டோபர் - இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று எதிரான 100 கோடி தடுப்பு ஊசி மருந்து சனவரி 2021 முதல் 21 அக்டோபர் 2021 வரை 10 செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.[81]
- 25 அக்டோபர் - 2019-ஆம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது திரைப்பட நடிகர் ரஜிகாந்திற்கு வழங்கப்பட்டது.[82][83]
- 30 அக்டோபர் - போப்பாண்டவர் பிரான்சிசை சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினார்.[84]
நவம்பர்
- 5 நவம்பர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில் வளாகத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்.[85]
- 19 நவம்பர் - புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரை மூலம் அறிவித்தார்.[86][87]
டிசம்பர்
- 10 டிசம்பர் - புதிய வேளாண்மை சட்டங்களை நாடாளுமன்றம் சட்டம் இயற்றி திரும்பப் பெற்றதை அடுத்து, ஒரான்டுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை விவசாயிகள் திரும்பப் பெற்றனர்.[88]
- 13 டிசம்பர் - காசி விஸ்வநாதர் கோயில் தாழ்வாரத்தின் முதல் கட்டத் திறப்பு விழாவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 டிசம்பர் 2021 அன்று துவக்கி வைத்தார்.[89][90]
- 20 டிசம்பர் - தேர்தல் சீர்திருத்தச் சட்ட வரைவு (2021) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.[91]
- 21 டிசம்பர் - தேர்தல் சீர்திருத்தச் சட்ட வரைவு (2021) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.[92]
- 21 டிசம்பர் - பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்திய சட்ட வரைவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.[93]
- 22 டிசம்பர் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் புது தில்லியில் தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பும், தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.[94]
Remove ads
இறப்புகள்
- 2 சனவரி - பூட்டா சிங், வயது 86, இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான பூட்டா சிங் தமது 86 வயதில் உடல்நலக் குறைவால் மறைந்தார்.[95]
- 5 சனவரி - எழுத்தாளர் ஆ. மாதவன் தனது 87-வது அகவையில் திருவனந்தபுரத்தில் காலமானார்.[96]
- 15 சனவரி - பி. எஸ். ஞானதேசிகன், தமிழ் மாநில காங்கிரசு துணைத்தலைவர் மருத்துவமனையில் காலமானார்.[97]
- 19 சனவரி - புற்றுநோய் மருத்துவர் வி. சாந்தா, அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர்[98]
- 26 பிப்ரவரி - தா. பாண்டியன், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் தமது 88வது வயதில் வயது மூப்பால் மறைவு
- 6 ஏப்ரல் - சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் தமது 86வது அகவையில் காலமானார்.
- 6 ஏப்ரல் - பெரியாரின் படைப்புகளைத் தொகுத்தவரும் பெரியாரிய - மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் தமது 96வது வயதில் காலமானார்.
- 17 ஏப்ரல் - நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் தனது 59வது வயதில் இயற்கை எய்தினார்.
- 29 ஏப்ரல் - அதிமுக முன்னாள் அமைச்சர் செ. அரங்கநாயகம் (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக 81 வயதில் காலமானார்.[99][100]
- 30 ஏப்ரல் - முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் சோலி சொராப்ஜி உடல் நலக்குறைவால் தமது 91வது வயதில் மறைந்தார்.[101]
- 30 ஏப்ரல் - தமிழ்த்திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் கே. வி. ஆனந்த் மாரடைப்பால் தமது 54 அகவையில் மருத்துவமனையில் இறந்தார்.[102][103]
- 4 மே - வி. கல்யாணம் வயது மூப்பின் காரணமாக தமது 98-வயதில் மறைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நேர்முகச் செயலாளராக இருந்தவர்.[104][105]
- 4 மே - சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதுமை காரணமாக தமது 87வது அகவையில் மருத்துவமனையில் மறைந்தார்.
- 6 மே - நடிகர் பாண்டு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி தமது 74வது வயதில் உயிரிழந்தார்.[106]
- 6 மே - முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனும், இராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவருமான அஜித் சிங் கொரோனா தொற்று காரணமாக தமது 82 வயதில் காலமானார்.[107]
- 9 மே - பட்டி மன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான அறிவொளி தமது 82 அகவையில் உடல்நலக் குறைவால் திருச்சியில் மறைந்தார்.
- 10 மே - சுவாமி ஓம்காரநந்தர் தமது 64 வயதில் மகாசமாதி அடைந்தார்.[108]
- 11 மே - கே. ஆர். கௌரி அம்மா, கேரளா மாநில மூத்த இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர், தமது 101 அகவையில் மறைந்தார்.[109]
- 21 மே - சுந்தர்லால் பகுகுணா - இமயமலை சுற்றுச் சூழல் ஆர்வலர், தமது 94-வது அகவையில் கொரனாத் தொற்றால் மறைந்தார்..[110]
- 29 மே - அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியவ மு. ஆனந்தகிருஷ்ணன் கொரனா பெருந்தொற்றால் தமது 92-வது அகவையில் மறைந்தார்.
- 30 மே - இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவிகளில் ஒருவரான மைதிலி சிவராமன் தமது 81-வது அகவையில் மறைந்தார்.
- 18 சூன் - ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் (வயது 91) கோவிட்-19 பெருந்தொற்று நோயால் சண்டிகரில் மறைந்தார்.
- 5 சூலை - சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி தமது 84-வது அகவையில் மறைந்தார்
- 7 சூலை - பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் திலிப் குமார் தமது 98-வது வயதில் மறைந்தார்.
- 8 சூலை - இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங் தமது 87-வது அகவையில் மறைந்தார்.
- 9 சூலை - சொல்லின் செல்வர் சோ. சத்தியசீலன் தமது 88-வது அகவையில் மறைந்தார்.
- 10 சூலை - ஆயுர்வேத மருத்துவர் பி. கே. வாரியர் தமது 100வது அகவையில் மறைந்தார்.
- 15 சூலை - புலிட்சர் பரிசு வென்ற புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கி ஆப்கானில் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 25 சூலை - தமிழறிஞர் இரா. இளங்குமரன் தமது 94வது அகவையில் மதுரையில் மறைந்தார்.
- 26 சூலை - தமிழ் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் தமது 76வது அகவையில் பெங்களூரில் மறைந்தார்.
- 5 ஆகஸ்டு - இ. மதுசூதனன் அதிமுக அவைத்தலைவர் உடல்நலக் குறைவால் 81 வயதில் சென்னையில் மறைந்தார்.
- 8 ஆகஸ்டு - திண்டிவனம் கே. இராமமூர்த்தி, முன்னாள் தமிழ்நாடு மாநில இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் தமது 84வது அகவையில் மறைந்தார்.
- 13 ஆகஸ்டு - மதுரை ஆதினத்தின் 292-வது மடாதியாக இருந்த அருணகிரிநாதர் 13 ஆகஸ்டு 2021 அன்று முக்தி அடைந்தார்
- 21 ஆகஸ்டு - உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், இராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான கல்யாண் சிங் தமது 89-வது அகவையில் மறைந்தார்.[111][112]
- 8 செப்டம்பர் - தமிழ்த் திரைப்படக் கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது 80-வது அகவையில் காலமானார்.
- 8 அக்டோபர் -தமிழ்த் திரைப்படக் கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவு காரணமாக தமது 65-வது வயதில் மருத்துவ மனையில் மறைந்தார்.[113]
- 12 அக்டோபர் - தமிழ்த் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் தமது 82-வது அகவையில் மறைந்தார்.[114]
- 28 அக்டோபர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந. நன்மாறன் தமது 74-வது அகவையில் மாரடைப்பால் மறைந்தார்.[115][116]
- 4 டிசம்பர் - தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் கொனியேட்டி ரோசையா தமது 88-வது அகவையில் 4 திசம்பர், 2021 அன்று மறைந்தார்.
- 8 டிசம்பர் - பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் பிபின் இராவத் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார்.[117][118]
- 26 டிசம்பர் - தமிழ்த்திரைபட நடிகர் மற்றும் பாடகர் மாணிக்க விநாயகம் தமது 78-வது அகவையில் மறைந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads