இசுட்ரோன்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுட்ரோன்சியம் அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium (IPA: /ˈstrɒntiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 38; இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Sr. இது ஒரு காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த வெள்ளி போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் செலஸ்டைன் மற்றும் இசுட்ரோன்சியனைட் என்னும் கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது கால்சியத்தைவிட மென்மையான (மெதுமையான) பொருள், நீருடன் வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடும் ஐதரசனும் உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லையாதலால், அறைவெப்பநிலையில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க மண்ணெணெய் (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை வானவேடிக்கை காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர்.
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads