2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Remove ads

2024 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் (2024 Summer Olympics, French: Jeux olympiques d'été de 2024), அதிகாரபூர்வமாக XXXIII ஒலிம்பியாதுப் போட்டிகள் (Games of the XXXIII Olympiad), பொதுவாக பாரிசு 2024 (Paris 2024), என்பது பிரான்சில் 2024 சூலை 26 முதல் ஆகத்து 11 வரை நடைபெற்ற பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பிரான்சின் தலைநகர் பாரிசு இப்போட்டிகளை நடத்திய நகரமாகும். இத்துடன் பிரான்சின் 16 ஏனைய நகரங்களிலும், பிரெஞ்சு பொலினீசியாவின் தாகித்தி தீவிலும் போட்டிகள் நடைபெற்றன.[5]

விரைவான உண்மைகள் நடத்தும் நகரம், குறிக்கோள் ...

2017 செப்டம்பர் 13 அன்று பெரு, லிமா நகரில் நடந்த 131-ஆவது பன்னாட்டு ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வில் பாரிசுக்கு விளையாட்டுப் போட்டிகள் வழங்கப்பட்டது. பாரிசு, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்கள் மட்டும் போட்டியிட்ட பிறகு, ஐஓசி 2024, 2028 ஆகிய போட்டிகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்கான செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தது. முன்பு 1900, 1924 போட்டிகள் நடத்தப்பட்டதால், இலண்டனுக்குப் பிறகு (1908, 1948, 2012) கோடைகால ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்தும் இரண்டாவது நகரமாக பாரிசு மாறும். பாரிசு 2024, பாரிசின் நூற்றாண்டு விழாவையும் குறிக்கும், அத்துடன் இந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சால் நடத்தப்படும் ஆறாவது (கோடையில் மூன்று, குளிர்காலத்தில் மூன்று) ஆகும். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தோக்கியோவில் 2020 கோடைகாலப் போட்டிகள் 2021-இற்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கோடைக்கால விளையாட்டுகள் அதன் பாரம்பரிய நான்கு ஆண்டு ஒலிம்பியாடு சுழற்சிக்குத் திரும்பும்.

பாரிசு 2024 இல் முறிப்பு நடனம் அறிமுகமானது.[6] ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமசு பாக் தலைமையில் நடைபெறும் இறுதி ஒலிம்பிக் போட்டிகளாக இருந்தது.[7] ஒரே எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் பங்கேற்கும் முதலாவது விளையாட்டுப் போட்டியாக இது அமைந்தது. விளையாட்டுகளுக்கு 8.3 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.[8]

Remove ads

ஏற்று நடத்த ஏலம்

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 2015 செப்டம்பர் 16இல் போட்டியிடும் ஐந்து நகரங்களின் பட்டியலை அறிவித்தது, இதில் ஹம்பர்க் நகரம் 2015 நவம்பரில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[9]

ஐரோப்பா

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...

வட அமெரிக்கா

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...

தேர்வு செய்யப்படாத போட்டியாளர்கள்

ஐரோப்பா

மேலதிகத் தகவல்கள் City, Country ...
Remove ads

பங்கேற்கும் நாடுகள்

Thumb
பங்கேற்கும் நாடுகளைக் காட்டும் நில வரைபடம்
Thumb
அணியினரின் எண்ணிக்கையைக் காட்டும் நில வரைபடம்
மேலதிகத் தகவல்கள் பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் ...

தேசிய ஒலிம்பிக் குழு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை (26 சூலை 2024)

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...
Remove ads

பதக்கப் பட்டியல்

  *   நடத்தும் நாடு (பிரான்சு)

மேலதிகத் தகவல்கள் நிலை, தேசிய ஒலிம்பிக் குழு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads