18வது மக்களவைக்கான தேர்தல் From Wikipedia, the free encyclopedia
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் 18-ஆவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தியாவில் 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை நடைபெற்றது.[2] ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்பட்டது.[3][4]
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும் அதிகபட்சமாக 272 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 968,821,926[1] | |||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 66.33% ( 1.07%)[lower-alpha 1] | |||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
|
1.4 பில்லியன் மக்கள் தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 70% க்கு சமம்.[5][6][7] 64.2 கோடி (642 மில்லியன்) வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றனர், இவர்களில் 31.2 கோடி (312 மில்லியன்) பேர் பெண்கள், இது பெண் வாக்காளர்களின் அதிகபட்ச பங்கேற்பு ஆகும்.[8][9] ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்களும் பாதுகாப்புப் படை வீரர்களும் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தலாகும், முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடித்தது, 1951-52 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது இரண்டாவது முறையாகும்.
2019, 2014 தேர்தல்களில் நடப்புப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாசக) அறுதிப்பெரும்பான்மை-குறைந்தபட்சம் 272 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோதி போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசு உட்படப் பல பிராந்தியக் கட்சிகளால் 2023 இல் உருவாக்கப்பட்ட "இந்தியா" என அழைக்கப்படும் இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்தது. மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வெறுப்புப் பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் விமர்சிக்கப்பட்டது,[10] மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) சில இடங்களில் செயலிழந்தது,[11][12] பாஜக தனது அரசியல் எதிரிகளை அடக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[13]
ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களும், 12 சட்டப் பேரவைகளில் உள்ள 25 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
மோதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களவையில் 543 இடங்களில் 293 இடங்களைப் பெற்றாலும், எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் கணித்ததை விட அதிக இடங்களைப் பெற்றதால், பாஜக அதன் பெரும்பான்மையை இழந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) 235 இடங்களைப் பெற்றது, இந்திய தேசிய காங்கிரசு 99 இடங்களைப் பெற்றது.[14][15][16]
முக்கிய ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் பாசக மற்றும் அதன் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) தீர்க்கமான வெற்றியைக் கணித்திருந்தன. இருப்பினும், பாசக தனித்து 240 இடங்களை மட்டுமே வென்றது, இது 2019 இல் அக்கட்சி தனித்துப் பெற்ற 303 இடங்களிலிருந்து குறைந்தது, அத்துடன் மக்களவையில் அதன் தனிப்பெரும்பான்மையையும் இழந்தது, அதேவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒட்டுமொத்த 543 மக்களவை இடங்களில் 293 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[17] இந்தியாக் கூட்டணி எதிர்பார்ப்புகளையும் மீறி, 234 இடங்களைப் பெற்றது, இவற்றில் 99 இடங்களை காங்கிரசு தனித்து வென்றது, 10 ஆண்டுகளில் முதல் முறையாக இக்கட்சி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[18][19][20] மக்களவையில் ஏழு சுயேச்சைகளும், அணிசேராக் கட்சிகளின் பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.[21][22][23] 2024 சூன் 7 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 293 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை நரேந்திர மோதி உறுதிப்படுத்தினார்.[24] 2024 சூன் 9 அன்று நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.[25] முதல் முறையாக ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு இவர் தலைமை தாங்கினார்,[26] ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய பிராந்தியக் கட்சிகள் மோதி அரசின் இரண்டு முக்கிய பங்காளிகளாக உருவெடுத்தன.[27][28][29]
பதினேழாவது மக்களவையின் பதவிக்காலம் 2024 சூன் 16 முடிவடைந்தது.[30] முந்தைய பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோதி தலைமையில் நடுவண் அரசை அமைத்தது.[31]
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 83 இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்து 543 தொகுதிகளிலிருந்தும் மக்களவைக்கு ஒவ்வொரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அந்த குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[32] 2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 104வது திருத்தம் ஆங்கிலோ-இந்திய சமூகத்திற்கு மக்களவையில் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களை ரத்து செய்தது.[33]
இந்த தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட தொகுதியில் குடியிருத்தல் அல்லது வாக்களிக்கப் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேர்தல் நாளின் போது வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் மற்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.[34] குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிலருக்கு மற்றும் சிறையிலிருப்பவர்களுக்கு வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் எவராலும் வாக்களிக்க இயலாது.[35] இந்த தேர்தலில் ஏறத்தாழ 96.8 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.[36][37][38]
மார்ச் 2024 இல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை தடை செய்யவும், காகித வாக்குச்சீட்டுகள் மற்றும் கையில் எண்ணும் முறைக்கு மாறவும் உத்தரவு பிறப்பிக்குமாறு காங்கிரசு கட்சி தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.[39] இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.[40]
தேர்தல் செயல்பாடு | கட்டம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
I | II | III | IV | V | VI | VII | |
அறிவிக்கை நாள் | 20 மார்ச் | 28 மார்ச் | 12 ஏப்ரல் | 18 ஏப்ரல் | 26 ஏப்ரல் | 29 ஏப்ரல் | 7 மே |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 27 மார்ச் | 4 ஏப்ரல் | 19 ஏப்ரல் | 25 ஏப்ரல் | 3 மே | 6 மே | 14 மே |
வேட்புமனு சரிபார்த்தல் | 28 மார்ச் | 5 ஏப்ரல் | 20 ஏப்ரல் | 26 ஏப்ரல் | 4 மே | 7 மே | 15 மே |
மனுக்களைத் திரும்ப பெறக் கடைசி நாள் | 30 மார்ச் | 8 ஏப்ரல் | 22 ஏப்ரல் | 29 ஏப்ரல் | 6 மே | 9 மே | 17 மே |
தேர்தல் நாள் | 19 ஏப்ரல் | 26 ஏப்ரல் | 7 மே | 13 மே | 20 மே | 25 மே | 1 சூன் |
வாக்கு எண்ணிக்கை | 4 சூன் | ||||||
தொகுதிகளின் எண்ணிக்கை | 101 1⁄2 | 87 1⁄2 | 95 | 96 | 49 | 57 | 57 |
மாநிலம்/ஒன்றியம் | மொத்தத்
தொகுதிகள் |
தேர்தல் தேதிகளும் தொகுதிகளின் எண்ணிக்கையும் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
கட்டம் 1 | கட்டம் 2 | கட்டம் 3 | கட்டம் 4 | கட்டம் 5 | கட்டம் 6 | கட்டம் 7 | ||
19 ஏப்ரல் | 26 ஏப்ரல் | 07 மே | 13 மே | 20 மே | 25 மே | 1 சூன் | ||
ஆந்திரப் பிரதேசம் | 25 | 25 | ||||||
அருணாசலப் பிரதேசம் | 2 | 2 | ||||||
அசாம் | 14 | 5 | 5 | 4 | ||||
பீகார் | 40 | 4 | 5 | 5 | 5 | 5 | 8 | 8 |
சத்தீசுகர் | 11 | 1 | 3 | 7 | ||||
கோவா | 2 | 2 | ||||||
குசராத்து | 26 | 26 | ||||||
அரியானா | 10 | 10 | ||||||
இமாச்சலப் பிரதேசம் | 4 | 4 | ||||||
சார்க்கண்டு | 14 | 4 | 3 | 4 | 3 | |||
கருநாடகம் | 28 | 14 | 14 | |||||
கேரளம் | 20 | 20 | ||||||
மத்தியப் பிரதேசம் | 29 | 6 | 6[lower-alpha 2] | 9[lower-alpha 2] | 8 | |||
மகாராட்டிரம் | 48 | 5 | 8 | 11 | 11 | 13 | ||
மணிப்பூர் | 2 | 1 1⁄2[lower-alpha 3] | 1⁄2[lower-alpha 3] | |||||
மேகாலயா | 2 | 2 | ||||||
மிசோரம் | 1 | 1 | ||||||
நாகாலாந்து | 1 | 1 | ||||||
ஒடிசா | 21 | 4 | 5 | 6 | 6 | |||
பஞ்சாப் | 13 | 13 | ||||||
இராசத்தான் | 25 | 12 | 13 | |||||
சிக்கிம் | 1 | 1 | ||||||
தமிழ்நாடு | 39 | 39 | ||||||
தெலங்காணா | 17 | 17 | ||||||
திரிபுரா | 2 | 1 | 1 | |||||
உத்தரப் பிரதேசம் | 80 | 8 | 8 | 10 | 13 | 14 | 14 | 13 |
உத்தராகண்டம் | 5 | 5 | ||||||
மேற்கு வங்காளம் | 42 | 3 | 3 | 4 | 8 | 7 | 8 | 9 |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 1 | 1 | ||||||
சண்டிகர் | 1 | 1 | ||||||
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ | 2 | 2 | ||||||
தில்லி | 7 | 7 | ||||||
சம்மு காசுமீர் | 5 | 1 | 1 | 1 | 1 | 1 | ||
இலடாக்கு | 1 | 1 | ||||||
இலட்சத்தீவுகள் | 1 | 1 | ||||||
புதுச்சேரி | 1 | 1 | ||||||
தொகுதிகள் | 543 | 101 1⁄2 | 87 1⁄2 | 95 | 96 | 49 | 57 | 57 |
கட்ட முடிவில் மொத்தத் தொகுதிகள் | – | 101 1⁄2 | 189 | 285 | 380 | 429 | 486 | 543 |
கட்ட முடிவில் முடிவான மொத்த தொகுதிகள் % | – | 18.69 | 34.80 | 52.48 | 69.98 | 79.01 | 89.50 | 100 |
கட்சி | மாநிலம்/ஒன்றியப் பகுதி | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்றவை | +/- | ||||
---|---|---|---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | உத்தரப்பிரதேசம் | 75 | 441 | 33 | 240 | |||
மேற்கு வங்காளம் | 42 | 12 | ||||||
மத்தியப் பிரதேசம் | 29 | 29 | ||||||
மகாராஷ்டிரா | 28 | 9 | ||||||
குஜராத் | 26 | 25 | ||||||
ராஜஸ்தான் | 25 | 14 | ||||||
கர்நாடகா | 25 | 17 | ||||||
தமிழ்நாடு | 23 | 0 | ||||||
ஒடிசா | 21 | 20 | ||||||
பீகார் | 17 | 12 | ||||||
தெலுங்கானா | 17 | 8 | ||||||
கேரளா | 16 | 1 | ||||||
ஜார்க்கண்ட் | 13 | 8 | ||||||
பஞ்சாப் | 13 | 0 | ||||||
அசாம் | 11 | 10 | ||||||
சத்தீஸ்கர் | 11 | 10 | ||||||
ஹரியானா | 10 | 5 | ||||||
டெல்லி | 7 | 7 | ||||||
ஆந்திரப் பிரதேசம் | 6 | 3 | ||||||
உத்தராகண்ட் | 5 | 5 | ||||||
இமாச்சலப் பிரதேசம் | 4 | 4 | ||||||
அருணாச்சலப் பிரதேசம் | 2 | 2 | ||||||
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ | 2 | 1 | ||||||
கோவா | 2 | 1 | ||||||
ஜம்மு காஷ்மீர் | 2 | 2 | ||||||
திரிபுரா | 2 | 2 | ||||||
அந்தமான் நிக்கோபார் | 1 | 1 | ||||||
சண்டிகர் | 1 | 0 | ||||||
லடாக் | 1 | 0 | ||||||
மணிப்பூர் | 1 | 0 | ||||||
மிஸோராம் | 1 | 0 | ||||||
புதுச்சேரி | 1 | 0 | ||||||
சிக்கிம் | 1 | 0 | ||||||
தெலுங்கு தேசம் கட்சி | ஆந்திரப் பிரதேசம் | 17 | 16 | |||||
ஐக்கிய ஜனதா தளம் | பீகார் | 16 | 12 | |||||
சிவசேனா | மகாராஷ்டிரா | 13 | 7 | |||||
பாட்டாளி மக்கள் கட்சி | தமிழ்நாடு | 10 | 0 | |||||
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | பீகார் | 5 | 5 | |||||
தேசியவாத காங்கிரஸ் கட்சி | மகாராஷ்டிரா | 4 | 5 | 1 | 1 | |||
இலட்சத்தீவு | 1 | 0 | ||||||
பாரத் தர்ம ஜனசேனா | கேரளா | 4 | 0 | |||||
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | கர்நாடகா | 3 | 2 | |||||
தமிழ் மாநில காங்கிரசு | தமிழ்நாடு | 3 | 0 | |||||
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | தமிழ்நாடு | 2 | 0 | |||||
அப்னா தால் (சோனீலால்) | உத்தரப்பிரதேசம் | 2 | 1 | |||||
அசோம் கண பரிஷத் | அசாம் | 2 | 1 | |||||
ஜனசேனா கட்சி | ஆந்திரப் பிரதேசம் | 2 | 2 | |||||
தேசிய மக்கள் கட்சி | மேகாலயா | 2 | 0 | |||||
இராஷ்டிரிய லோக் தளம் | உத்தரப்பிரதேசம் | 2 | 2 | |||||
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | ஜார்க்கண்ட் | 1 | 1 | |||||
இந்துசுதானி அவாமி மோர்ச்சா | பீகார் | 1 | 1 | |||||
நாகா மக்கள் முன்னணி | மணிப்பூர் | 1 | 0 | |||||
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி | நாகாலாந்து | 1 | 0 | |||||
இராசுடிரிய லோக் மோர்ச்சா | பீகார் | 1 | 0 | |||||
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | உத்தரப்பிரதேசம் | 1 | 0 | |||||
இராசுடிரிய சமாசு பட்சா | மகாராஷ்டிரா | 1 | 0 | |||||
ஐக்கிய தாராள மக்கள் கட்சி | அசாம் | 1 | 0 | |||||
சுயேச்சை | தமிழ்நாடு | 1 | 0 | |||||
மொத்தம் | 540 | 292 |
கட்சிகள் | மாநிலம்/ஒன்றியப் பகுதி | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்றவை | +/- | |||
---|---|---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | கர்நாடகா | 28 | 329 | ||||
மத்தியப் பிரதேசம் | 27 | ||||||
ஆந்திரப் பிரதேசம் | 23 | ||||||
குஜராத் | 23 | ||||||
ராஜஸ்தான் | 23 | ||||||
ஒடிசா | 20 | ||||||
மகாராஷ்டிரா | 17 | ||||||
தெலுங்கானா | 17 | ||||||
உத்தரப்பிரதேசம் | 17 | ||||||
கேரளா | 16 | ||||||
மேற்கு வங்காளம் | 14 | ||||||
அசாம் | 13 | ||||||
பஞ்சாப் | 13 | ||||||
சத்தீஸ்கர் | 11 | ||||||
பீகார் | 9 | ||||||
ஹரியானா | 9 | ||||||
தமிழ்நாடு | 9 | ||||||
ஜார்க்கண்ட் | 7 | ||||||
உத்தராகண்ட் | 5 | ||||||
இமாச்சலப் பிரதேசம் | 4 | ||||||
டெல்லி | 3 | ||||||
அருணாச்சலப் பிரதேசம் | 2 | ||||||
கோவா | 2 | ||||||
ஜம்மு காஷ்மீர் | 2 | ||||||
மணிப்பூர் | 2 | ||||||
மேகாலயா | 2 | ||||||
அந்தமான் நிக்கோபார் | 1 | ||||||
சண்டிகர் | 1 | ||||||
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ | 1 | ||||||
லடாக் | 1 | ||||||
இலட்சத்தீவு | 1 | ||||||
மிஸோராம் | 1 | ||||||
நாகாலாந்து | 1 | ||||||
புதுச்சேரி | 1 | ||||||
சிக்கிம் | 1 | ||||||
திரிபுரா | 1 | ||||||
சமாஜ்வாடி கட்சி | உத்தரப்பிரதேசம் | 62 | 63 | ||||
மத்தியப் பிரதேசம் | 1 | ||||||
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | மேற்கு வங்காளம் | 23 | 53 | ||||
கேரளா | 15 | ||||||
மகாராட்டிரம் | 2 | ||||||
தமிழ்நாடு | 2 | ||||||
அந்தமான் நிக்கோபார் | 1 | ||||||
ஆந்திரப் பிரதேசம் | 1 | ||||||
அசாம் | 1 | ||||||
பீகார் | 1 | ||||||
ஜார்க்கண்ட் | 1 | ||||||
கர்நாடகா | 1 | ||||||
பஞ்சாப் | 1 | ||||||
ராஜஸ்தான் | 1 | ||||||
தெலுங்கானா | 1 | ||||||
திரிபுரா | 1 | ||||||
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | மேற்கு வங்காளம் | 42 | 48 | ||||
அசாம் | 4 | ||||||
மேகாலயா | 1 | ||||||
உத்தரப்பிரதேசம் | 1 | ||||||
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | கேரளா | 8 | 27 | ||||
உத்தரப்பிரதேசம் | 4 | ||||||
ஜார்க்கண்ட் | 3 | ||||||
பஞ்சாப் | 3 | ||||||
மத்தியப் பிரதேசம் | 3 | ||||||
தமிழ்நாடு | 2 | ||||||
மேற்கு வங்காளம் | 2 | ||||||
ஆந்திரப் பிரதேசம் | 1 | ||||||
அசாம் | 1 | ||||||
சத்தீஸ்கர் | 1 | ||||||
மகாராஷ்டிரா | 1 | ||||||
பீகார் | 1 | ||||||
ஒடிசா | 1 | ||||||
ராஷ்டிரிய ஜனதா தளம் | பீகார் | 23 | 24 | ||||
ஜார்க்கண்ட் | 1 | ||||||
ஆம் ஆத்மி கட்சி | பஞ்சாப் | 13 | 22 | ||||
டெல்லி | 4 | ||||||
அசாம் | 2 | ||||||
குஜராத் | 2 | ||||||
ஹரியானா | 1 | ||||||
பாரத் ஆதிவாசி கட்சி | ராஜஸ்தான் | 6 | 21 | ||||
மத்தியப் பிரதேசம் | 5 | ||||||
மகாராஷ்டிரா | 4 | ||||||
குஜராத் | 2 | ||||||
ஆந்திரப் பிரதேசம் | 1 | ||||||
சத்தீஸ்கர் | 1 | ||||||
தாத்ரா & நகர் ஹவேலி | 1 | ||||||
ஜார்க்கண்ட் | 1 | ||||||
சிவசேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) | மகாராஷ்டிரா | 21 | |||||
திராவிட முன்னேற்றக் கழகம் | தமிழ்நாடு | 21 | |||||
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) | மகாராஷ்டிரா | 10 | 11 | ||||
இலட்சத்தீவு | 1 | ||||||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | மேற்கு வங்காளம் | 3 | 9 | ||||
மகாராஷ்டிரா | 3 | ||||||
ஜம்மு காஷ்மீர் | 2 | ||||||
பீகார் | 1 | ||||||
மத்தியப் பிரதேசம் | 1 | ||||||
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | ஜார்க்கண்ட் | 5 | 6 | ||||
ஒடிசா | 1 | ||||||
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) | பீகார் | 3 | 4 | ||||
ஜார்க்கண்ட் | 1 | ||||||
புரட்சிகர சோசலிசக் கட்சி | மேற்கு வங்காளம் | 3 | 4 | ||||
கேரளா | 1 | ||||||
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | கேரளா | 2 | 3 | ||||
தமிழ்நாடு | 1 | ||||||
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ஜம்மு காஷ்மீர் | 3 | |||||
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி | ஜம்மு காஷ்மீர் | 3 | |||||
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | தமிழ்நாடு | 2 | |||||
அசாம் ஜாதியா பரிஷத் | அசாம் | 1 | |||||
கேரள காங்கிரஸ் (ஜே) | கேரளா | 1 | |||||
கேரளா காங்கிரஸ் (எம்) | கேரளா | 1 | |||||
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | தமிழ்நாடு | 1 | |||||
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | தமிழ்நாடு | 1 | |||||
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | ராஜஸ்தான் | 1 |
மாநிலம்/ஆ.பு | மொத்தம் | கட்டம் வாரியாக வாக்குப்பதிவு (சதவீதம்) | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கட்டம் 1
19 ஏப்ரல் |
கட்டம் 2
26 ஏப்ரல் |
கட்டம் 3[46]
7 மே |
கட்டம் 4
13 மே |
கட்டம் 5
20 மே |
கட்டம் 6
25 மே |
கட்டம் 7
1 சூன் | ||||||||||
இடங்கள் | % | இடங்கள் | % | இடங்கள் | % | இடங்கள் | % | இடங்கள் | % | இடங்கள் | % | இடங்கள் | % | இடங்கள் | % | |
ஆந்திரப் பிரதேசம் | 25 | 81.86 | – | – | – | – | – | – | 25 | 81.86 | – | – | – | – | – | – |
அருணாசலப் பிரதேசம் | 2 | 77.68 | 2 | 77.68 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
அசாம் | 14 | 81.62 | 5 | 78.25 | 5 | 81.17 | 4 | 85.45 | – | – | – | – | – | – | – | – |
பீகார் | 40 | 4 | 49.26 | 5 | 59.45 | 5 | 59.14 | 5 | 58.21 | 5 | 56.76 | 8 | 57.18 | 8 | 53.29 | |
சத்தீசுகர் | 11 | 72.17 | 1 | 68.29 | 3 | 76.24 | 7 | 71.98 | – | – | – | – | – | – | – | – |
கோவா | 2 | 76.06 | – | – | – | – | 2 | 76.06 | – | – | – | – | – | – | – | – |
குசராத்து | 26 | 60.13 | – | – | – | – | 25 | 60.13 | – | – | – | – | – | – | – | – |
அரியானா | 10 | 64.80 | – | – | – | – | – | – | – | – | – | – | 10 | 64.80 | – | – |
இமாச்சலப் பிரதேசம் | 4 | 70.90 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | 4 | 70.90 |
சார்க்கண்டு | 14 | – | – | – | – | – | – | 4 | 66.01 | 3 | 63.21 | 4 | 65.39 | 3 | 70.88 | |
கருநாடகம் | 28 | 70.64 | – | – | 14 | 69.56 | 14 | 71.84 | – | – | – | – | – | – | – | – |
கேரளம் | 20 | 71.27 | – | – | 20 | 71.27 | – | – | – | – | – | – | – | – | – | – |
மத்தியப் பிரதேசம் | 29 | 66.87 | 6 | 67.75 | 6 | 58.59 | 9 | 66.74 | 8 | 72.05 | – | – | – | – | – | – |
மகாராட்டிரம் | 48 | 61.29 | 5 | 63.71 | 8 | 62.71 | 11 | 63.55 | 11 | 62.21 | 13 | 56.89 | – | – | – | – |
மணிப்பூர் | 2 | 80.47 | 1 1⁄2 | 76.10 | 1⁄2 | 84.85 | – | – | – | – | – | – | – | – | – | – |
மேகாலயா | 2 | 76.60 | 2 | 76.60 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
மிசோரம் | 1 | 56.87 | 1 | 56.87 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
நாகாலாந்து | 1 | 57.72 | 1 | 57.72 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
ஒடிசா | 21 | 74.51 | – | – | – | – | – | – | 4 | 75.68 | 5 | 73.50 | 6 | 74.45 | 6 | 74.41 |
பஞ்சாப் பகுதி | 13 | 62.80 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | 13 | 62.80 |
இராசத்தான் | 25 | 61.34 | 12 | 57.65 | 13 | 65.03 | – | – | – | – | – | – | – | – | – | – |
சிக்கிம் | 1 | 79.88 | 1 | 79.88 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
தமிழ்நாடு | 39 | 69.72 | 39 | 69.72 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
தெலங்காணா | 17 | 65.67 | – | – | – | – | – | – | 17 | 65.67 | – | – | – | – | – | – |
திரிபுரா | 2 | 80.92 | 1 | 81.48 | 1 | 80.36 | – | – | – | – | – | – | – | – | – | – |
உத்தரப் பிரதேசம் | 80 | 56.92 | 8 | 61.11 | 8 | 55.19 | 10 | 57.55 | 13 | 58.22 | 14 | 58.02 | 14 | 54.04 | 13 | 55.85 |
உத்தராகண்டம் | 5 | 57.22 | 5 | 57.22 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
மேற்கு வங்காளம் | 42 | 3 | 81.91 | 3 | 76.58 | 4 | 77.53 | 8 | 80.22 | 7 | 78.45 | 8 | 82.71 | 9 | 76.80 | |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 1 | 64.10 | 1 | 64.10 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
சண்டிகர் | 1 | 67.98 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | 1 | 67.98 |
தாத்ரா/நகர் அவேலி/தாமன்/தியூ | 2 | 71.31 | – | – | – | – | 2 | 71.31 | – | – | – | – | – | – | – | – |
தில்லி | 7 | 58.69 | – | – | – | – | – | – | – | – | – | – | 7 | 58.69 | – | – |
சம்மு காசுமீர் | 5 | 58.58 | 1 | 68.27 | 1 | 72.22 | – | – | 1 | 38.49 | 1 | 59.10 | 1 | 55.40 | – | – |
இலடாக்கு | 1 | 71.82 | – | – | – | – | – | – | – | – | 1 | 71.82 | – | – | – | – |
இலட்சத்தீவுகள் | 1 | 84.16 | 1 | 84.16 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
புதுச்சேரி | 1 | 78.90 | 1 | 78.90 | – | – | – | – | – | – | – | – | – | – | – | – |
மொத்தம் | 543 | 66.33 | 101 1⁄2 | 66.14 | 87 1⁄2 | 66.71 | 93 | 65.68 | 96 | 69.16 | 49 | 62.20 | 58 | 63.37 | 57 | 63.88 |
முதல் சுற்றைத் தொடர்ந்து, குசராத்தில் உள்ள சூரத் தொகுதியின் வேட்பாளரான முகேசு தலால், மற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பாசக தனது முதல் இடத்தை வென்றது.[47][48] போட்டி வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் முடிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் சான்றளித்ததால், அந்தத் தொகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.[49]
ஒட்டுமொத்த தேர்தல் முடிவு நரேந்திர மோதிக்கு ஒரு "அதிர்ச்சி" என்று விமர்சிக்கப்பட்டது,[50][51] பாசக 400 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்த்ததை விடக் குறைந்துவிட்டது.[52] தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பாசக-விற்கு அமோகப் பெரும்பான்மை கிடைக்கும் என்றாலும், தேர்தல் நாளன்றைய கணிப்புகளை விட இந்தியக் கூட்டமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது,[53] உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம் போன்ற முக்கிய மாநிலங்களில் அது எதிர்பார்த்ததை விடப் பெரும் வெற்றியடைந்தது.[54] மக்களவையில் என்.டி.ஏ பெரும்பான்மையைத் தக்கவைக்க, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவைத் தளமாகக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பெற்ற 28 தொகுதிகளை பாசக நம்ப வேண்டியிருந்தது.[55][56][57]
மாநிலம்/ஒன்றிய ஆட்புலம் | தொகுதிகள் | |||
---|---|---|---|---|
தேசகூ | இந்தியா | ஏனையவை | ||
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 1 | 1 | 0 | 0 |
ஆந்திரப் பிரதேசம் | 25 | 21 | 0 | 4 |
அருணாசலப் பிரதேசம் | 2 | 2 | 0 | 0 |
அசாம் | 14 | 11 | 3 | 0 |
பீகார் | 40 | 30 | 9 | 1 |
சண்டிகர் | 1 | 0 | 1 | 0 |
சத்தீசுகர் | 11 | 10 | 1 | 0 |
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ | 2 | 1 | 0 | 1 |
தில்லி | 7 | 7 | 0 | 0 |
கோவா (மாநிலம்) | 2 | 1 | 1 | 0 |
குசராத்து | 26 | 25 | 1 | 0 |
அரியானா | 10 | 5 | 5 | 0 |
இமாச்சலப் பிரதேசம் | 4 | 4 | 0 | 0 |
சம்மு காசுமீர் | 5 | 2 | 2 | 1 |
சார்க்கண்டு | 14 | 9 | 5 | 0 |
கருநாடகம் | 28 | 19 | 9 | 0 |
கேரளம் | 20 | 1 | 19 | 0 |
இலடாக்கு | 1 | 0 | 0 | 1 |
இலட்சத்தீவுகள் | 1 | 0 | 1 | 0 |
மத்தியப் பிரதேசம் | 29 | 29 | 0 | 0 |
மகாராட்டிரம் | 48 | 17 | 30 | 1 |
மணிப்பூர் | 2 | 0 | 2 | 0 |
மேகாலயா | 2 | 0 | 1 | 1 |
மிசோரம் | 1 | 0 | 0 | 1 |
நாகாலாந்து | 1 | 0 | 1 | 0 |
ஒடிசா | 21 | 20 | 1 | 0 |
புதுச்சேரி | 1 | 0 | 1 | 0 |
பஞ்சாப் பகுதி | 13 | 0 | 10 | 3 |
இராசத்தான் | 25 | 14 | 11 | 0 |
சிக்கிம் | 1 | 1 | 0 | 0 |
தமிழ்நாடு | 39 | 0 | 39 | 0 |
தெலங்காணா | 17 | 8 | 8 | 1 |
திரிபுரா | 2 | 2 | 0 | 0 |
உத்தரப் பிரதேசம் | 80 | 36 | 43 | 1 |
உத்தராகண்டம் | 5 | 5 | 0 | 0 |
மேற்கு வங்காளம் | 42 | 12 | 30 | 0 |
மொத்தம் | 543 | 293 | 234 | 16 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.