இந்தியாவிலுள்ள மலைவாழிடங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலைவாழிடங்கள் (Hill stations) என்பன அதிக உயரத்தில் உள்ள ஒரு நகரங்களைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஐரோப்பியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இது போன்ற மலைவாழிடங்களை உபயோகித்தனர். இவைகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

இந்திய துணைக்கண்டத்தில் ஏழு முக்கிய மலைத்தொடர்கள் இருக்கின்றன, மற்றும் இவற்றுள் மிகப் பெரியது இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமயமலை. கிழக்கு இமயமலையிலுள்ள கஞ்சஞ்சங்கா மலையில் டார்ஜீலிங், கேங்டாக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி போன்ற புகழ் பெற்ற நகரங்கள் மற்றும் கோயில்கள் அமைந்துள்ளன. இதே பகுதியில் தான் சிவாலிக் மலை தொடர் உள்ளது, இங்குள்ள புகழ்பெற்ற மலைவாழிடங்கள் டல்லவுசி, குலு, சிம்லா, நைனிடால் போன்றவை ஆகும்.[1]
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மலைவாழிடங்கள், ஆங்கிலேயர்களால் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் பெரும்பாலான மலைவாழிடங்கள், இமயமலையில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மற்றும் மகாராட்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன.
இந்த மலைவாழிடங்கள் உலகப் புகழ் பெற்றிருப்பதால் கோடை விடுமுறையைக் கழிக்க இங்கு பயணிகள் அடிக்கடி வருகின்றனர். இதனால் இந்த இடங்கள் அனைத்திலிருந்தும் முக்கிய நகரங்களுக்கு ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவையால் இணைக்கப்படுள்ளன.
Remove ads
வரலாறு
11 ஆம் நூற்றாண்டில் கங்க வம்சத்தால் நந்தி மலை உருவாக்கப்பட்டது.[2][3] இது திப்பு சுல்தானால் (1751 - 1799) கோடைகால ஓய்விடமாக பயன்படுத்தப்பட்டது.[4]
பிரித்தானிய அரசாங்கம் மற்றும் குறிப்பாக இந்தியா பிரித்தானிய படை, 50 முதல் 60 மலைவாழிடங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் கண்டுபிடித்தன. மீதமுள்ள இடங்களை இந்தியா மன்னர்கள் பல் நூற்றாண்டுகளாக பொழுதுபோக்கு இடங்களாகாவும் நிரந்தர தலைநகரமாவும் உருவாக்கினர். நீண்ட கோடைக்காலத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இந்த இடங்களை உருவாக்கினர்.
Remove ads
தேவை
பல மலைவாழிடங்கள் கோடைக்காலத்தின் தலைநகராக செயல்பட்டன, எடுத்துக்காட்டாக சிம்லா, பிரித்தானிய இந்தியாவின் கோடைகால தலைநகராக செயல்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு மலைவாழிடங்கள், கோடைக்காலத்தின் தலைநகராக இருந்த பணி முடிவுக்கு வந்தன. ஆனால் பல மலைவாழிடங்கள் இன்றும் பிரபலமான கோடைவாசத்தலங்களாக இருக்கின்றன.
இந்தியாவிலுள்ள சில முக்கிய மலைவாழிடங்கள்
ஆந்திர பிரதேசம்

அருணாசலப் பிரதேசம்

அசாம்

பிகார்

சத்தீசுகர்

கோவா

குசராத்


இமாச்சலப் பிரதேசம்




சம்மு காசுமீர்


சார்க்கண்டு

கர்நாடகா


கேரளம்








லடாக்

மத்தியப் பிரதேசம்
மகாராட்டிரம்



மணிப்பூர்


மேகாலயா

மிசோரம்

நாகாலாந்து

ஒடிசா

இராசத்தான்

சிக்கிம்


தமிழ்நாடு



த்லங்காணா
திரிபுரா

உத்தராகண்டம்



மேற்கு வங்காளம்

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads